பருத்தியின் பேக்டீரியக் கருகல்  நோய்: சேந்தோமேனாஸ் கேம்பஸ்ட்ரீஸ் பிவி மால்வேசியாரம் 
                அறிகுறிகள் 
            
              - வளர்ந்த  செடிகளில் பல்வேறான பாகங்கள் தாக்கப்படுகின்றன. அவற்றில் தோன்றும் அறிகுறிகளை நான்கு  வகைகளாக பிரிக்கலாம்.
 
              - கோணப்புள்ளி  : இலைகளின் அடிப்பாகத்தில் நீர் ஊறிய சிறுபுள்ளிகள் நாளடைவில் விரிவடைகின்றன. அவை பழுப்பு  நிறம் பெற்று பின் கருநிறமாக மாறுகின்றன. மேலும் இப்புள்ளிகள் விரிவடையாமல் சிறுசிறு  நரம்புகளுக்கிடையில் இப்புள்ளிகள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் கோண வடிவத்தைக் கொண்டிருக்கின்றன.
 
              - நரம்பு  கருத்தல் : நடு நரம்பு, கிளை நரம்புகள் இவற்றின் இருபுறங்களிலும், நீர்க் கசிவு தோன்றுகிறது.  நீர்க்கசிவு நாளடைவில் கருநிறமடைவதால் நரம்புகள் கருநிறமாகக் காணப்படுகின்றன.
 
              - கருங்கிளை  : இலைகளின் அடிப்பாகத்தில் பேக்டீரியா கசிந்து காய்ந்து விடுகின்றன. இலைக்காம்பு, தண்டுப்பாகம்  முதலியவற்றிற்கும் பரவி அவை கருநிறமடைகின்றன. அப்பகுதிகளில் வெடிப்புகள் ஏற்பட்டு அதில்  பேக்டீரியா கசிந்து பசை ஒட்டியிருப்பது போன்று தோன்றகின்றது. தாக்கப்பட்ட கிளைகளில்  உள்ள இலைகள் யாவும் உதிர்ந்து இலைகள் இல்லாத கருங்கிளைகளாகத் தோன்றுகின்றன. இலைகள்  உதிர்ந்து கிளைகள் மட்டும் கருத்திருப்பது கருநிறக் கைகளை நீட்டியிருப்பது போன்றிருப்பதர்  கருங்கை நோய் என்றும் அழைக்கப்படுவதுண்டு.
 
              - காய்  அழுகல் : பருத்தி காய்க்கும் பருவத்தில் பிஞ்சு முதல் முதிர்ந்த காய்கள் வரை தாக்கப்படுவதுண்டு.  மொட்டுக்களும் பிஞ்சுகளும் தாக்கப்பட்டு உதிர்ந்த விடுகின்றன.
 
              - நீர்க்கசிவுடன்  கூடிய வட்டமான புள்ளிகள் காய்களில் தோன்றுகின்றன. அவை பெரிதாகி நிறமடைந்து நாளடைவில்  கருநிறமாடைவதுடன் புள்ளிகளின் நடுப்பாகம் குழியாகவும் இருக்கும்.
 
              - இவ்வாறான  புள்ளிகள் ஒன்றோடொன்று இணைந்து காய்களின் பெரும்பாகம் தாக்கப்பட்டுக் காய்க்குள்ளிருக்கும்  பஞ்சு பேக்டீரியக் கசிவினால் மஞ்சள் நிறமடைகின்றது. காய்கள் முதிருமுன்பே வெடித்து  விடுகின்றன.
 
           
            கட்டுப்பாடு 
            
              - கிளைகள்  திறந்து காற்றோட்டமாக இருக்கும்படி செய்யவேண்டும். 
 
              - இலைகள்  ஈரமாக இருக்கும் போது களைகளை வெட்டுவது போன்ற வேலைகள் செய்யக்கூடாது.
 
              - பாதிக்கப்பட்ட  பாகங்கள் உதிர்ந்துவிடும்.
 
              - அமில  நேர்த்தி செய்த விதை தரமான நல்ல, நோயற்ற விதைகளைப் பயன்படுத்தவேண்டும்.
 
              - நோயால்  பாதிக்கப்பட்ட செடிகளை களைந்தெறியவேண்டும்.
 
              - பயிர்  சுழற்சி முறையை மேற்கொள்ளவேண்டும். பொட்டாஸ் போடவேண்டும்.
 
              - பிளான்டோமைசின்  100 கிராம் + 1.25 கிலோ காப்பர் ஆக்ஸிகுளோரைடு / எக்டர் அளவில் 3 அல்லது 4 முறை  15 நாள் இடைவெளியில் போடவேண்டும்.
 
             
 | 
              
                
               |