வேரழுகல் நோய்: ரைசக்டோனியா  பெடடிகோலா 
                அறிகுறிகள் 
            
              - இந்நோய்  இளம் செடிகளிலும் வளர்ந்த செடிகளிலும் தோன்றுகிறது. ஆரம்பத்தில் இலைகள் வாடத் தொடங்குகின்றன.
 
              - பின்பு  இலைகள் காய்ந்து செடியும காய்ந்து விடுகின்றது. நோய் தீவிரமாகப் பரவினால் தாக்கப்பட்ட  செடிகளில் ஆணிவேரைத் தவிர மற்ற வேர்கள் யாவும் அழுகிவிடுகின்றன.
 
              - ஆணி  வேரின் மேல் பட்டை அழுகிச் சிதைந்து நார் நாராக உரிந்து விடுகிறது. நோயினால் பாதிக்கப்பட்ட  செடியை மெதுவாக இழுத்தாலும் எளிதாகக் கையோடு வந்துவிடும்.
 
              - தாக்கப்பட்ட  வேர்ப்பகுதியில் இழை முடிச்சகுள் இணைந்திருக்கும்.
 
           
            கட்டுப்பாடு 
            
              - பருத்தியடன்  பனிப்பயிரை ஊடுபயிராக விதைத்தால் இந்நோய் குறையும்.
 
              - விதைக்கும்  நேரத்தை மாற்றி அமைத்து (அதாவது வெப்பநிலை அதிகமாக இருக்கும் நேரத்தில்) விதைக்கலாம்.
 
              - விதையை  பினோமைல் அல்லது கார்பன்டாசிம் 2 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்து விதைக்கலாம்.
 
              - 2.5  கிலோ டிரைக்கோடெர்மா விரிடியுடன் 50 கிலோ தொழு உரத்தை கலந்து மண்ணில் போடலாம்.
 
              | 
              
               |