பயிர் பாதுகாப்பு :: பருத்திப் பயிரைத் தாக்கும் பூச்சிகள்்
புகையிலைப்  புழு : ஸ்போடாப்டிரா லிட்டுரா (புரோடீனியா புழு)

பூச்சியின் விபரம்

  • முட்டைகள் - குவியலாய், பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • புழு – கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும். கரும்புள்ளிகள் உடலின் மேற்பரப்பில் காணப்படும்.
  • அந்துப்பூச்சியின் முன் இறக்கை செம்பழுப்பு நிறமாகவும், வெள்ளை நிறக்கோடுகளைக் கொண்டிருக்கும்.
  •  பின் இறக்கை வெள்ளை நிறமாகவும், பழுப்புநிறத் திட்டுகளையும் கொண்டிருக்கும்.

தாக்குதலின் அறிகுறிகள்

  • புழு இரவு நேரங்களில் இலையை உண்டு சேதப்படுத்தும்.
  • சேதம் அதிகமாகும் போது தாக்கப்பட்ட பயிர்களில் இலை மற்றும் காய்கள் உருவாகாது.
இளம்புழு வளர்ந்தபுழு

கட்டுப்பாடு :

  • பொருளாதார சேத நிலை (100 மீட்டர் நீளத்திற்கு 8 முட்டை குவியல்)
  • விளக்கு பெரறி அமைத்து அந்துப்பூச்சியினைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • இனக்கவர்ச்சி பொறியை எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் அமைத்து ஆண் அந்துப்பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • வயல் வரப்புகளில் ஆமணக்கை பயிரிடலாம்.
  • முட்டைக் குவியலையும், இளம் புழுக்களையும் பருத்தி ஆமணக்கு வரப்புப் பயிரிலிருந்து சேகரித்து அழிக்கலாம்.
  • பயிர் சேதங்களுடன் வளர்ச்சியடைந்த புழுக்களைச் சேகரித்து அழிக்கலாம்.
  • இப்பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேத நிலையைத் தாண்டும் பொழுது கீழ்காணும் ஏதேனும் ஓர் மருந்தினைக் தெளித்து அந்துப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம். (எக்டருக்கு)
  • குளோர்பைரியாஸ் 20 EC 2.0 லி
  • குளோரான்டி ரானிலிப்ரோல் 18.5 SC 150 மிலி
அந்துப்பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016