தாக்குதலின் அறிகுறிகள் 
                    
                      - நில மட்டத்திற்கு       சற்று மேலே தாக்கப்பட்டத்அடித்தண்டுகளில் முண்டுகள் போன்ற வீக்கம் காணப்படும்.
 
                      -                       இளம் பயிர் வாடிக் காய்ந்துவிடும்
                      
 
                     
                    
                    பூச்சியின் விபரம் 
                    
                      - புழு - வெள்ளை       நிறமாக, கால்கள் இல்லாமல் காணப்படும்.
 
                      - வண்டு - சிறியதாக,       கருமை நிறத்தில் இருக்கும். உடலின் மேற்பரப்பில் வெள்ளை நிறத்திட்டுகள் காணப்படும்.
 
                     
                    கட்டுப்பாடு : பொருளாதார சேதார நிலை :10 சத சேதம் 
                    
                      - எக்டருக்கு       30 கிலோ கார்போபியுரான் மருந்தினை மண்ணில் தூவ வேண்டும்.
 
                      - நடவு செய்த       20 நாட்கள் கழித்து தூரைச் சுற்றி மண் அணைக்க வேண்டும்.
 
                      - அடி உரமாக       தொழு எருவை எக்டருக்கு 25 டன் அல்லது வேப்பம் புண்ணாக்கு 250 கிலோவை தூவ       வேண்டும்.
 
                      - குளோர்பைரிஃபாஸ்       20EC (10மிலி/ 1 கிலோ விதைக்கு) மருந்து கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்க       வேண்டும்.
 
                      -                       குளோர்பைரிஃபாஸ் மருந்து (2.5 மிலி/ லிட்டர்) கலந்து விதைத்த 15 மற்றும்  30 ஆம் தூரைச் சுற்றி ஊற்ற வேண்டும்.
 
                    |