| பயிர் பாதுகாப்பு  :: பருத்திப் பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
                
                  | காய் உண்ணும் பூச்சிகள் | 
                 
                
                  | இளஞ்சிகப்பு காய்ப் புழு :   பெக்டினோபோரா கொச்பியெல்லா  | 
                 
                
                  தாக்குதலின் அறிகுறிகள் 
                   
                    
                      -  முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள் கப்பைகளையும்,  மொக்குகளையும் , பூக்களையும் மற்றும் இளம் காய்களையும் தாக்கி அழிக்கும்.
 
                      -  தாக்கப்பட்ட மொட்டுகள் உதிர்ந்து விடும்.
 
                      -  தாக்கப்பட்ட மலர்கள் நெருக்கமாய் குவிந்து காணப்படும்.
 
                      -  வளர்ச்சியடைந்த புழு காயினைத் துளைத்து உள்ளே சென்று  உண்டு சேதம் விளைவிக்கும்,விதைகளையும் தாக்கும்.
 
                      -  இதனால் தாக்கப்பட்ட பஞ்சுகள் கரைபடிந்து காணப்படும்.
 
                     
                     பூச்சியின்  விபரம் 
                    
                      -  புழு இளஞ்சிகப்பு நிறத்திலும்,  பழுப்பு நிற தலையையும் கொண்டிருக்கும்.
 
                      -  அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் இருக்கும். இரண்டு  இறக்கையிலும் வரிவரியாய் கோடுகளும்,    புள்ளிகளும் காணப்படும்.
 
                     
 கட்டுப்பாடு 
                    
                      - பயிர் சேதங்களை அகற்றி வயல்களை சுத்தமாக  வைத்து கொள்ள வேண்டும்.
 
                      - நிலத்தை ஆழமாக உழுவதன் மூலம் கூட்டுப்புழுக்களை  அழிக்கலாம்.
 
                      - சரியான பருவத்தில் விதைப்பு செய்வதன்மூலம்  இப்பூச்சியின் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
 
                      - தண்ணீர் தேங்குதலைத் தவிர்க்க வேண்டும்.
 
                      - இப்பூச்சியின் தாக்குதல் பொருளாதார  சேத நிலையைத் தாண்டும் பொழுது எக்டர்க்கு ட்ரைசோபாஸ் 2.5 லிட்டர் அல்லது எண்டோசல்பான்  2 லிட்டர் மருந்தைத் தெளித்து இளஞ்சிகப்பு புழுவின் தாக்குதலைக் குறைக்கலாம்.                      
 
                      | 
                  
                    
                        | 
                       
                    
                      | புழு  | 
                       
                    
                      |   | 
                     
                    
                        | 
                     
                    
                      | அந்துப்பூச்சி | 
                     
                                       
                     | 
                 
                | 
           
         
        
  |