| பயிர் பாதுகாப்பு  :: பருத்திப் பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
               
                
                  |  வெள்ளை  ஈ:  பெமிசியா டேபேசி  | 
                 
                
                  அறிகுறிகள் 
                    
                      - இலைகளில்       வெளிர் நிற புள்ளிகள் தோன்றி, பின் இந்த புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலையில் உள்ள       திசுக்கள் மஞ்சள் நிறமாக மாறும்
 
                      - தீவிர       தாக்குதலால், இலைகள் உதிர்ந்துவிடும்
 
                      - மொட்டுகள்       மற்றும் காய்கள் உதிர்ந்து விடும். காய்கள் ஒழுங்கற்ற முறையில் வெடிக்கும்
 
                      - இலை சுருள்       நச்சுயிரி நோயை பரப்பும்
 
                     
                    பூச்சியின் விபரம் 
                    
                      - இளம்பூச்சி       பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் சிவப்புக் கண்களுடன் முட்டை வடிவத்தில் இருக்கும்.
 
                      - கூட்டுப்புழு       முட்டை வடிவத்தில், இலையின் அடிப்புறத்தில் காணப்படும்.
 
                      - வளர்ந்த       பூச்சி மிகச் சிறியதாக. மஞ்சள் நிற உடலுடனும், இறக்கைகள் வெள்ளை நிற மெழுகு பூசியது       போல் இருக்கும்.
 
                     
                     | 
                  
                    
                        | 
                        | 
                        | 
                       
                    
                      |      இளம் பூச்சி  | 
                      கூட்டுப்புழு  | 
                      முதிர்ப்பூச்சி | 
                       
                                          | 
                 
                
                  கட்டுப்பாடு 
                    
                      - குளிர்       அல்லது கோடை பருவத்தில் பருத்தியை வருடத்தில் ஒரு முறை பயிரிட வேண்டும்
 
                      - பயிர்       சுழற்சி முறை மேற்கொள்ள வேண்டும். சோளம், ராகி, கேழ் விரகு, மக்காச்சோளம் போன்ற       பயிர்களுடன் பயிரிடக் கூடாது
 
                      - களைச்       செடிகளான துத்தி, வெண்டி இனத்தைச் சார்ந்த செடிகளை அழிக்க வேண்டும்.  பரிந்துரைக்கப்பட்ட பயிர் இடைவெளியில் விதைக்க       வேண்டும்
 
                      - அதிக இடைவெளி       விட்டு விதைக்க வேண்டும்.
 
                      - பரிந்துரைக்கப்பட்ட       உரங்களை மட்டுமே சரியான அளவில் இட வேண்டும்
 
                      - தாமதமாக       விதைக்கக் கூடாது
 
                      - வயல் சுகாதராமாக       இருக்க வேண்டும்
 
                      - கத்திரி,       வெண்டை, சூரியகாந்தி ஆகியவற்றைப் பயிரிடக் கூடாது
 
                      - மஞ்சள்       நிற ஒட்டு பொறி 12/ ஹெக் அளவில் வைக்கலாம்
 
                      - தாக்கப்பட்ட       செடிகளை சேகரித்து, அழிக்க வேண்டும்
 
                      - வேப்பங்கொட்டைச்       சாறு 5% (50 கிலோ) , வேப்எண்ணெய் 5 மிலி தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்
 
                      - மீன் எண்ணெய்       சோப் 25 கிராம் /  லிட்டர்
 
                      - நொச்சி       இலைசாறு 5 சதம் (50 கிராம் லிட்டர்)
 
                      - நித்திய       கல்யாணி / சுடுகாட்டு மல்லி இலைச் சாறு  5 சதம்
 
                      - மித்தைல்       டெமட்டான் 25 EL 500 மி.லி. (அ) பாஸ்போமிடான் 40 SL 600 மிலி/ ஹெக் தெளிக்கலாம்
 
                      - பின்வருவனவற்றுள்       ஏதேனும் ஒன்றை தாக்குதல் தீவிரமாக இருக்கும் போது தெளிக்கலாம் 
 
                      
                        - அஸிட்டாமிப்பிரிட்        20 SP 100 கிராம்
 
                        - குளோர்பைரிபாஸ்        20 EC 1.25 லிட்டர்
 
                        - மீன்        எண்ணெய் சோப்பு 25 கிலோ
 
                       
                     
குறிப்பு : செயற்கை பைரித்திராய்டுகள் பயன்படுத்துவதால் பருத்தியில் வெள்ளை  ஈயின் தாக்கம் அதிகமாகும். சைப்பர் மெத்திரின், பென்வலேரேட், டெல்டாமெத்திரின் வெள்ளை ஈ,  வளர்வதற்கு காரணமாகின்றன. | 
                 
                              | 
           
       
  |