பயிர் பாதுகாப்பு :: பருத்திப் பயிரைத் தாக்கும் பூச்சிகள்்
பச்சை தத்துபூச்சி : அமராஸ்க டீவாஸ்டீன்ஸ்

அறிகுறிகள்:

  • இலைகளின் சாற்றை உறிஞ்சுவதால் இலையானது மஞ்சள் நிறமாக காணப்படும்.
  • இலைகளின் சாற்றை உறிஞ்சுவதால் இலையானது சுருக்கங்களுடன் காணப்படும்.
  • பூச்சியின் தாக்குதல் அதிகமாகும் போது இலையானது கருகிய நிலையில்(காப்பர் பர்ன்) காணப்படும்.
  • பூச்சியால் தாக்கப்பட்ட செடியின் இலைகள் காய்ந்து விழுவதால் செயிடின் வளர்ச்சி தடுக்கப்படும் .

பூச்சியின் விபரம்:

  • இளம்பூச்சி:இளம் பூச்சிகள் மென்மையான உடலுடன் பச்சை நிறத்தில் இருக்கும்.இந்த பூச்சியானது இலையில் அடிப்புறத்தில் காணப்படும்.
  • முதிர்ப்பூச்சி:இவை கூம்புப் பலகை வடிவில் பச்சை நிறத்தில் காணப்படும்.
காப்பர் பர்ன் பச்சை தத்துபூச்சி
   

கட்டுப்பாடு:
பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிகொல்லியைத்  தெளிக்க வேண்டும்.

கார்போபியுரான் 3% CG (கிலோ/எக்டர்) பைப்ரோநில் 5% SC 1500-2000 (மி.லி /எக்டர்)
இமிடுபகுளிபிரிட் 40 SL 600 (மில்லி/எக்டர்) மித்தைல் டிமேட்டான் 25% EC 1200 (மி.லி /எக்டர்)
அஸிடாமபிரிட் 20% SP 50 (கிராம் /எக்டர்) பாசலோன் 35% EC 857 (மி.லி /எக்டர்)
அசாரிடியக்டின் 0.03% WSP 50 (கிராம்/எக்டர்) புரோபோனோபாஸ் 50% EC 1000 (மி.லி /எக்டர்)
பியுப்ரோசின் 25% SC 1000 (மி.லி /எக்டர்) தைகோளிபிரிட் 21.7%  SC 100-125 (மி.லி /எக்டர்)
கோளேனகயேந்தின் 50% WDG 30-40 (கிலோ/எக்டர்) தையமீத்தாகஸ்ம் 30% KS 10 (கிலோ/எக்டர்)
தையாபென்தியூரான் 50% WP 600 (கிராம்/எக்டர்) தையமீத்தாகஸ்ம் 25% WG 100 (கிராம்/எக்டர்)
தைமீத்துயேட் 30% EC 660 (மி.லி /எக்டர்)  
  • NSKE (வேம்பு விதைச் சாறு) 5% 25 (கிலோ/எக்டர்)
    • பூச்சியன் தாக்குதலானது அதிகமாக இருக்கும் போது வேப்பு எண்ணெய் கலவை 0.5% அல்லது வேப்பு எண்ணெய் 3% என்ற விகிகத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை என்ற இடைவெளி விட்டு தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016