தாக்குதலின் அறிகுறிகள். 
                    
                      - இப்புழு,       காயினைத் துளைத்து தலைப்பகுதியை மட்டும் உள்ளே செலுத்தி, உடலின் பாதி பகுதியை       வெளியே வைத்துக் கொண்டு உண்ணும்.
 
                      - காயில்       வட்ட வடிவ ஓட்டையும், சிறு துகள் போன்ற எச்சமும் காணப்படும்.
 
                     
                    பூச்சியின் விபரம் 
                    
                      - முட்டைகள்       - அந்துப்பூச்சி மஞ்சள் நிற முட்டைகளை இலைகளின் மேற்பரப்பில் தனித்தனியே இடும்.
 
                      - புழு பச்சை       அல்லது பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும்
 
                      - கூட்டுப்புழு       மண்ணிற்குள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
 
                      - அந்துப்பூச்சி       பழுப்பு நிறத்தில் இருக்கும். முன் இறக்கையில் V- வடிவ கோடு இருக்கும். வெண்ணிற       பின் இறக்கையின் ஓரப்பகுதி பழுப்பு நிறத்தில் இருக்கும்.
 
                     
கட்டுப்பாடு: 
பொருளாதார  சேத நிலை, செடிக்கு 1 முட்டை/ 1 புழு)  
(தொடர்ச்சியாக  பருத்தி பயிரிடுவதைத் தவிர்த்து மாற்று பயிர்களை பயிரிட வேண்டும். 
  - புழுவால்       தாக்கப்பட்ட சப்பை, காய், மொட்டு, பூக்களை சேகரித்து அகற்ற வேண்டும்.
 
  - தேவைக்கு       அதிகமாக பசுந்தாள் உரங்களை இடக்கூடாது.
 
  - தேவையான       அளவு நீர் நிர்வாகம் செய்ய வேண்டும்.
 
  - விதைப்பு       செய்த 7வது மற்றும் 12வது வாரங்களில் நீயுக்ளியார் பாலிஹெட்ரோசிஸ் (என்.பி.வி)       வைரஸை (3X102 POB)/மிலி மாலை நேரத்தில் இரண்டு முறை தெளித்து காய் புழுவினை அழிக்கலாம்.
 
  - விதைப்பு       செய்த 45 நாட்கள் கழித்து முட்டை ஒட்டுண்ணியான  ட்ரைக்கோகிரம்மா (6.25 சி.சி /       எக்டருக்கு 15 நாள் இடைவெளியில் மூன்று முறை) பயன்படுத்தி அந்துப்பூச்சியின் முட்டைகளை       அழிக்கலாம்.
 
  - கண்ணாடி       இறக்கைப் பூச்சி, கிரைசோபெர்லா ஐ எக்டருக்கு 1 லட்சம் என்ற எண்ணிக்கையில் வெளியிட்டு       காய்ப்புழுவை அழிக்கலாம்.
 
  - இயற்கை       எதிரிகளுக்கு பாதிப்பு விளைவிக்காத பூச்சி மருந்துகளான வேப்பெண்ணெய், வேப்பங்கொட்டை       சாறு, பாசலோன் ஆகியவற்ளைத் தெளிக்க  வேண்டும்.
 
  - கைத்தெளிப்பான்       அல்லது விசைத் தெளிப்பான் கொண்டுதான் மருந்தைத் தெளிக்க வேண்டும்.
 
  - மருந்துகளை       சரியான அளவிலும், சரியானஅளவு தண்ணீருடனும் கலந்து தெளிக்க வேண்டும்.
 
  - காய்கள்       உருவாகும் சமயம் கீழ்காணும் ஏதேனும் ஓர் மருந்தினை எக்டருக்கு 1000 லிட்டர் தண்ணீருடன்       கலந்து தெளிக்கவும்.
 
  
    - பாசலோன்        35 EC 2.5 லிட்டர்
 
    - குயினால்பாஸ்        25 EC 2.0 லிட்டர்
 
    - கார்பரில் 50 நனையும் தூள் 2.5 கிலோ/எக்டர் 
 
   
  | 
                                      
                    
                        | 
                      முட்டைகள்       | 
                     
                    
                        | 
                      புழு     | 
                     
                    
                        | 
                      கூட்டுப்புழு  | 
                       
                    
                        | 
                       அந்துப்பூச்சி | 
                       
                    |