முட்டைகோஸ்  பச்சைக் காவடிப்புழு: ட்ரைக்கோப்ளுசியாநி 
                சேதத்தின்  அறிகுறிகள்: 
              
                - இளம்      புழுக்கள் இலைகளில் நிறைய துளைகள் ஏற்படுத்தியிருக்கும்
 
                - அதிகமாகத்      தாக்கப்பட்ட பயிரில் இலைக்காம்புகளை மட்டுமே காணமுடியும்              
  
 பூச்சியின் விபரம்: 
              
                - முட்டை: பச்சை நிறக்கோடுகளுடன் கூடிய முட்டைகளை      தனித்தனியே இலையின் அடிப்பரப்பில் இடும்.
 
                - புழு: பச்சைநிறத்தில், மங்களான வெள்ளைக்கோடுகளுடனும்      காணப்படும்.
 
                - பூச்சி: அந்துப்பூச்சி பழுப்பு      நிறத்தில், குண்டாக இருக்கும். தலை மற்றும் மார்பு பகுதி சாம்பல் நிறத்திலும்      வயிற்றுப்பகுதி வெள்ளை நிறத்திலும் இருக்கும். முன்இறக்கை பழுப்பாக வெண்ணிறக்      கோடுகளுடன் காணப்படும்.
 
               
              
              கட்டுப்படுத்தும்  முறைகள்: 
              
                - காவடிப்புழுக்களை கையால் சேகரித்து அழிக்கலாம்
 
                - ஹெக்டேருக்கு ஒரு விளக்குப்பொறி அமைக்கவும்
 
                - மாலத்தியான் 0.1 சதம் தெளிக்கவும்
 
                | 
            
              
                 | 
                 
  | 
               
              
                புழு  | 
                பூச்சி  | 
               
              |