தாக்குதலின் அறிகுறிகள்: 
                      
                        - இளம் புழுக்கள் இலைகளில் மஞ்சள் நிறத்தில்      துளையிட்டு உள்ளிருந்து சாப்பிடும்
 
                        - புழுக்கள் இலைகளின் பச்சையத்தைச் சுரண்டித்தின்று      சல்லடை போல் செய்துவிடும் மேலும் இலையின் மேற்பரப்பில் வெண்ணிறத் திட்டுகளை உருவாக்கும்
 
                        - வளர்ந்த புழுக்கள் இலைகளில் துளைகளை ஏற்படுத்தி      சேதப்படுத்தும்
 
                       
                      பூச்சியின் விபரம்: 
                      
                        - முட்டை: மிகச்சறிய மஞ்சள் நிற முட்டை. இலையின் மேற்பரப்பில்      தனியாகவோ அல்லது குழுக்களாகவோ முட்டையிடும்
 
                        - புழு: வெளிர் மஞ்சள் கலந்த பச்சை நிறப்புழுக்கள்
 
                        - கூட்டுப்புழு: கண்ணாடி போன்ற பட்டுக்கூட்டில் இலைகளில் இருக்கும்.
 
                        - பூச்சி: அந்துப்பூச்சி சாம்பல் நிறம் கலந்த      பழுப்பு வண்ணமுடையது. முன் இறக்ககைளில் வெண்மை நிறக்கோடுகள் இருக்கும். இப்பூச்சி,      இறக்கைகளை மடித்து அமர்ந்திருக்கும்போது  “வைரம்” போன்ற புள்ளிகள் முதுகுப்      புறத்தில் இருப்பதைக் காணலாம்.
 
                       
                      கட்டுப்படுத்தும் முறை: 
                      
                        - அறுவடைக்குபிறகு      பண்னைக் கழிவுகள், இலைகள், சேகரித்து அழிக்கவும்.
 
                        - கடுகுப்      பயிரை கவர்ச்சிப்பயிராக 25 வரிசை முட்டைக்கோசுக்கு 2 வரிசை கடுகு பயிரிட வேண்டும்.
 
                        - கடுகு      பயிருக்கு மட்டும் டைக்குளோர்வாஸ் 0.076% தெளித்து புழுக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும்.
 
                        - இனக்கவர்ச்சிப்பொறி      ஹெக்டேருக்கு 12 வைக்கவும்.
 
                        - பயிர்      சுழற்சி முறையில் பூசினி வகைக்கொடி,அவரை,தக்காளி மற்றும் தர்ப்பூசினி முதலியவற்றை      பயிரிடலாம்
 
                        - மலைப்பிரதேசங்களில்      புழு ஒட்டுண்ணியான டைடிக்மா செமிக்ளோசம் ஹெக்டேருக்கு 1,00,000 விடவும்.எமற்றப்பகுதியில் கொடீசியா புளுட்டேல்லே ஹெக்டேருக்கு 20,000 - மூன்று முறை நாற்று நட்ட 20ம் நாளிலிருந்து      10 நாட்கள் இடைவெளியில் விடலாம்.
 
                        - வேப்பம்   கொட்டை வடி நீர் 5 சதம் தெள்க்கவும்.
 
                        - உயிரியல் புச்சிக்கொல்லி பெசில்லஸ் துருன்ஜியென்சிஸ் வகை குர்ஸ்டக்கி 2 கிராம்/லிட்டர்      தெளிக்கவும்.
 
                        - கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 0.5 சதம் நட்ட 10, 20 மற்றும் 30 நாட்களுக்கு தெளிக்கவும்.
 
                        | 
                    
                      
                          | 
                          | 
                       
                      
                        | பூ சேதமடைதல்  | 
                        இலைகளில் பச்சையத்தைச் சுரண்டித்தின்றுதல்  | 
                       
                     
                        
                           | 
                           
  | 
                         
                        
                          புழு  | 
                          பூச்சி  | 
                         
                     
 
  
    | புச்சிக்கொல்லி | 
    அளவு | 
   
  
    | அசார்டியாக்டின்   5% வேப்பங்கொட்டைச் சாறு | 
    5.0 மி.லி/ 10லி | 
   
  
    | லுபெண்சுரான்   5.4% EC | 
    1.2 மி.லி/ லி | 
   
  
    | ஸ்பினோசெட்   2.5% SC | 
    1.2 மி.லி/ லி | 
   
  
    | ட்ரைகுளோரோபான்   50% EC | 
    1.0 மி.லி/ லி | 
   
  |