சிவப்பு  தண்டுத் துளைப்பான்: சுசீரா காஃபியே 
                சேதத்தின்  அறிகுறிகள்:  
              
                - புழுக்கள், தண்டுகளையும், கிளைகளையும்  துளைத்து சாப்பிடும் 
 
                - செடி வாடி விடும் 
 
                - புழுக்களின் கழிவுப்பொருள் துளைகளுக்கு  வெளியே தொங்கியிருக்கும் 
 
                - முற்றிய நிலையில் கிளைகள் காய்ந்துவிடும் 
 
               
              பூச்சியின்  விபரம்:  
              
                - புழு: சிவப்பு நிறமாக கருந்தலையுடன்  காணப்படும் 
 
                - பூச்சி: அந்துப்பூச்சி ஆரஞ்சு நிறத்தில்  இருக்கும். இறக்கையில் நீலநிறப்புள்ளிகளுடன் இருக்கும் 
 
               
              கட்டுப்படுத்தும்  முறைகள்:  
              
                - தாக்கப்பட்ட செடிகள் மற்றும் கிளைகளை  வெட்டி எரித்துவிட வேண்டும் 
 
                - வெவீரியா பெசியானா எனும் பூசண வித்துகளை  வயலில் தெளித்து பூச்சியை அழிக்கலாம்  
 
                | 
             
               
               |