| பயிர் பாதுகாப்பு :: தென்னை பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
     
        
          
             சாறு வடிதல் நோய்: தீயலவியாப்ஸிஸ் பாரடாக்ஸா  | 
           
          
            தாக்குதலின் அறிகுறிகள்:
              
                - ஜூலை முதல் நவம்பர் மாதத்தில் இந்நோய்      வேகமாக பரவுகிறது.
 
                  - சாறு வடிதல் நோயை மரத்தின், நீள்வெட்டு      வெடிப்பு மற்றும் காயங்களிலிருந்து கருஞ்சிவப்பு நிற சாறு சில அடி துாரத்திற்கு      தாரை தாரையாக வடிவதை கொண்டு அறியலாம்.
 
                  - நோய் முற்றும்போது புள்ளிகள் மேல்நோக்கி      பரவுகிறது.
 
                  - கசியும் சாறு காய்ந்து கருப்பு நிறமாகி      விடும்.  புள்ளிகளுக்கு அடியில் உள்ள திசுக்கள் அழுகி முதலில் மஞ்சள் நிறமாகிபின்னர்      கருப்பாகி விடும்.
 
                  - நோய் முற்றிய நிலையில் மரத்தில் உட்பகுதி      அழுகி நடுவில் குழாய் போன்ற இடைவெளியுடன் காணப்படும்.
 
                  - தண்டின் திசுக்கள் தீவிரமாக பாதிப்படையும்      போது,  வெளிச்சுற்று ஓலைகள் மஞ்சள் நிறமாகி,  காய்ந்து,  முதிரும்முன்      உதிர்ந்து விடும். குலைவிடுவதும் கடுமையாக பாதிப்படைகிறது.
 
                | 
           
          
            
              
                |   | 
                  | 
                  | 
                  | 
                  | 
                  | 
               
              
                |   | 
                அடர்ந்த சிவப்பு பழுப்பு திரவம் | 
                  | 
                கருப்பு நிற காய்ந்த சாறு | 
                  | 
                பாதிக்கப்பட்ட தென்னை  | 
               
              | 
           
          
            கட்டுப்படுத்தும் முறை:               
              உழவியல் முறை: 
              
                - தண்டில் காயம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
 
                - மரம்      ஒன்றுக்கு, ஆண்டிற்கு 50கி.கி      தொழுஉரத்துடன் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கினை 200 கிராம் எதிர்      உயிர் பூஞ்சை டிரைகோடெர்மா விரிடி உடன் கலந்து குழிகளில் இட வேண்டும்.
 
                - வெயில் காலங்களில் போதிய பாசன வசதியையும், மழைக்காலங்களில்      போதிய வடிகால் வசதியையும் மேற்கொள்ள வேண்டும்.
 
                - பரிந்துரைக்கப்பட்ட      உரங்களை சரியான அளவில் இட வேண்டும். 
 
               
              இரசாயன முறைகள் 
              
                - முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளை செதுக்கி      அந்த காயத்தின் மீது 5% டிரைடிமார்ஃப் அல்லது 1 % போர்டோ      பசை தடவலாம். அதைத் தொடர்ந்து ஒன்று இரண்டு நாட்களுக்கு பின் தாரை ஊற்றலாம். செதுக்கிய      பகுதிகளை  எரித்து விட வேண்டும்.
 
                - டிரைடிமார்ப் 5 மில்லியை 100 மில்லிதண்ணீரில் கலந்து      வருடத்திற்கு மூன்று முறை ஏப்ரல் - மே, செப்டம்பர் - அக்டோபர், ஜனவரி - பிப்ரவரி மாதங்களில்      வேர் மூலம் செலுத்துவது அழுகல் பரவுவதை தடுக்கும்.
 
                | 
           
               
  |