தட்டைக்கால் நாவாய் பூச்சி: பாரடாசைனஸ் ரோஸ்டிரேட்டஸ்
              இது கடற்கரையோரங்களில் குறிப்பாக கேரளப் பகுதிகளில் (திருவனந்தபுரம்,  வயநாடு,  காஸர்கோடு) அதிகம் காணப்படுகிறது. 
              தாக்குதலின் அறிகுறிகள்:
              
                - பூச்சிகள் மற்றும் "நிம்ப்" எனப்படும் இளம்பூச்சிகள் குரும்பையைத் தாக்கி நீரை உறிஞ்சி விடுவதோடு, புல்லி வட்டத்திற்குக் கீழே சிறு கொட்டை போன்ற தடிப்பை ஏற்படுத்துகின்றன. 
                 
                - பாதிக்கப்பட்ட காய்களில் வெடிப்பு பகுதிகள் தோன்றி அதன் உரிமட்டையை வீணாக்கிவிடுவதுடன் பிசின் போன்ற திரவம் வெடிப்பு வழியே கசியச் செய்கிறது.  அதோடு தேங்காய்களில் பருப்பு இன்றி வெற்றுக்காயாகப் போய்விடும். 
                 
                - இப்பூச்சிகளின் தாக்குதல் அதிகரிக்கும்போது காய்கள் உதிர்ந்து விடும்.   மேலும் முதிர்ந்த காய்களின் தரம் கெட்டுவிடும்.
 
              
              
                
                  
                      | 
                      | 
                      | 
                  
                  
                    | உருக்குலைந்த தேங்காய் | 
                    தேங்காய்களில் விரிசல் | 
                    குரும்பை வீழ்ச்சி | 
                  
                
              
              
                பூச்சியை அடையாளம் காணுதல்:
  -   வளர்ச்சியடைந்த பூச்சிகள் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் வாழ்நாள் சுழற்சி ஒரு மாதம் காலம் மட்டுமே
  
 
  
    
        | 
        | 
      
    
      | பாரடாசைனஸ் ரோஸ்டிரேட்டஸ் | 
      
    
மேலாண்மை: 
                
  இராசயன முறை:
                            
              
                - தென்னைகளை நன்கு கவனித்து, வளராத இளம் புழுக்கள் இருபின் அவற்றை சேகரித்து அழித்து விட வேண்டும், கார்பரைல் 50 WP மருந்தினை 2 கி/லி அளவில் கலந்து தெளிக்கலாம். 
                 
                - 0.1% கார்போரைல் (1 மி.லி/ லி நீரில் கலந்தது) கரைசலை கொண்டைப் பகுதியிலுள்ள புதிதாக மலர்ந்த பெண் மலர்களின் மீது தெளிக்க வேண்டும்.  இம் மருந்துகள் முற்றிய காய்கள் மற்றும் ஓலைகளின் மீது படக்கூடாது.  நண்பகல் நேரத்தில் மருந்து தெளிப்பதால் தென்னையின் கருவுறுதலுக்கு உகந்த நன்மை செய்யும் பூச்சிகள் கொல்லப்படுவதைத் தவிர்க்கலாம.
                   
                - டைக்குளோர்வாஸ் 76 WSC மருந்தினை  2 மி.லி/லி தெளிப்பதன் மூலமும் இதனைக் கட்டுப்படுத்தலாம். 
                 
                
              இயந்திர முறை:
              
              
                - பொறிஅமைக்கும் முறை: வளர்ச்சியடைந்த பூச்சிகளை விளக்குப்பொறி அமைத்துக் கவர்ந்து கொல்லலாம்.