கருந்தலைப்புழு (அ) பச்சையம் தின்னும் இலைப்புழு: ஒபிசீனியா அரினோசெல்லா 
              இப்புழுவானது கடலோரப் பகுதிகளில் குறிப்பாக இந்தியா போன்ற தீபகற்ப நாடுகளில் அதிக சேதம் விளைவிக்கின்றது.  வருடம் முழுவதும் தாக்குதல் இருந்தாலும் கோடைக்கலங்களில் இதன் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. 
              தாக்குதலின் அறிகுறிகள்:
              
                - இது அனைத்து வயதிலுள்ள மரங்களையும் தாக்குகிறது.
 
                - மரத்தின் அடிப்பகுதிகளில் உள்ள ஓலைகளை அதிகம் தாக்குவதால் கொண்டையின் மேற்பகுதியல் உள்ள 3-4 ஓலைகளைத் தவிர மற்ற ஓலைகள்  அனைத்தும் காய்ந்து போய்விடும். 
 
                - ஓலையின் அடிப்பகுதியில் உள்ள பச்சையத்தைச் சுரண்டி இப்புழுக்கள் தின்றுவிடும். 
 
                - அதிகமாகத் தாக்கப்பட்ட மரங்கள் எரிந்து தீய்ந்து போனது போல் தென்படும்.
 
              
              
                
                  
                      | 
                      | 
                      | 
                  
                  
                    வறண்ட திட்டுகள் 
                     | 
                    சுரண்டப்பட்ட இலைகள் | 
                    தீய்ந்த தோற்றம் | 
                  
                
              
பூச்சியை அடையாளம் காணுதல்:
  - இளம் புழு: புழுக்கள் பச்சை கலந்த பழுப்பு நிற உடலையும், கரும்பழுப்பு நிற தலையையும் உடையது.  இதன் முன் மார்பு பழுப்பு நிறத்திலும், பின்புறம் சிவப்பு நிறத்திலும் காணப்படும்.  உடலில் பழுப்பு நிற வரிகள் காணப்படும். 
   
  - கூட்டுப்புழு:  கழிவு மற்றும் பச்சைய இலைகளைச்  சுரண்டி செய்யப்பட்ட மெல்லிய நுாலாம் பட்டையினுள் கூட்டுப்புழுக்கள் காணப்படும். 
   
  - முதிர்ந்த பட்டாம்பூச்சி:  சாம்பல் நிற வெள்ளைப் பட்டாம் பூச்சியாகும். 
    
      - பெண்: பெண் பூச்சியானது நீண்ட உணர்கொம்பும், முன் இறக்கையில் 3 மங்கலான புள்ளிகளைக் கொண்டிருக்கும். 
       
      - ஆண்: பின் இறக்கை தோலுடன் இணையும் இடத்தில் சற்று முடியுடன் காணப்படும்.
 
    
   
  
  
    
        | 
        | 
        | 
    
    
      | இளம் புழு | 
      கூட்டுப்புழு | 
      முதிர்ந்த பட்டாம்பூச்சி | 
    
  
மேலாண்மை: 
              சாதாரண முறைகள்/உழவியல் முறைகள்: 
              
                - தாக்கப்பட்ட ஓலைகளை வெட்டி எடுத்து அழித்து விட வேண்டும்.  குறிப்பாக கோடை காலம் துவங்கும் முன் செய்து விடுவது நன்று.
                 
              
              உயிரியல் முறை:
              
                - மெத்திலிட் மற்றும் பிராக்கானிட் என்ற குடும்பங்களைச் சார்ந்த ஒட்டுண்ணிகள் 1:8 என்ற விகிதத்தில் இலைகளின் அடிப்பாகத்தில் விடுவதால் புழுக்கள் கட்டுப்படுத்தப்படும்.  (அ)  3000 / ஹெ என்ற அளவில் விட வேண்டும். இந்த ஒட்டுண்ணிகளை கொண்டைப் பகுதியின் மேற்புறம் விட்டால் சிலந்தி போன்ற  பூச்சி உண்ணிகள் அவற்றை உண்டு விடும்.   எனவே இலையின் அடிப்பாகத்தில் இரசாயனத் தெளிப்பு செய்த பின் 3 வாரங்கள் கழித்து விட வேண்டும்.
                   
                - யூலோபிட், பிராக்கிமெரியா, சாந்தோபிம்பிளா ஒட்டுண்ணிகள் கருந்தலைப் புழுவின் கூட்டுப்புழுக்களைக் கட்டுப்படுத்தும்.