| பயிர் பாதுகாப்பு  :: தென்னை பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
              மாவுப்பூச்சி/ கள்ளிப்பூச்சிகள்: சூடோகாக்லாங்கிஸ்டைனஸ் 
தாக்குதலின் அறிகுறிகள்: 
  - மாவுப்பூச்சிகள் தென்னையில் இளம் திசுக்கள் வளரும் இளம் மட்டைகள்,  ஓலைகள்,  பூம்பாலைகள், புல்லி/ அல்லி வட்டம் என அனைத்துப் பகுதிகளையும் தாக்குகின்றன. 
 
   
  - இவை விரியாத பூம்பாளைகளிலிருந்து சாற்றை உறிஞ்சிவிடுவதால் இலைகள் காய்ந்து, மஞ்சள் நிறமடைந்து,  காய்ந்து விடுகின்றன. 
 
   
  - இதன் விளைவாக இலைகளின் வளர்ச்சி குறைந்து, மிகவும் குன்றி, சுருள் சுருளாகக் காணப்டுகின்றன.
 
   
  - இதன் அறிகுறிகள் பெரும்பாலும் ஓலை அழுகல் நோயின் அறிகுறிகளைப் போன்றே காணப்படுகின்றன.
 
   
  - தாக்கப்பட்ட பாளைகள் விரிவது இல்லை.  அவை விரிந்தாலும் சரியாகக் காய்ப்பது இல்லை. 
 
   
  - இளம் குரும்பைகளில் காம்புக்கு அடியில் இம்மாவுப் பூச்சிகள் கூட்டமாக இருந்து கொண்டு சாறை உறிஞ்சுகின்றன.  இவ்வாறு தாக்கப்பட்ட குரும்பைகள் பூச்சி பெருக இடமளிப்பதால், அவை அங்கேயே பெருகிப் பின் பல மரங்களைத் தாக்குகின்றன.
 
 
  
    
        | 
        | 
        | 
     
    
      மாவுப்பூச்சி கூட்டம் 
       | 
      வளர்ச்சி குன்றிய இலைகள் | 
      சுருக்கமுடைய இலைகள் | 
     
  
 
பூச்சியை அடையாளம் காணுதல்: 
  - நிம்ப்: இளம் பூச்சி நிம்ப் எனப்படுகிறது.  நீள்வட்ட வடிவத்தில்,  தட்டையாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். 
 
     
  - முதிர்ந்த பூச்சி: ஆண் பூச்சிகள் மஞ்சள் நிறத்திலும், பெண் பூச்சிகள் நீளவாக்கில் சற்று ஒல்லியாக வெள்ளை நிறத்திலும் இருக்கும். 
 
    வாழ்க்கைச் சுழற்சி:-  
   
           
              மேலாண்மை:  
                உழவியல் முறைகள்: 
              
                - இப்பூச்சி தங்கி வளரும் பிற களைச் செடிகளை அகற்ற வேண்டும். தாக்கப்பட்ட மரத்தின் ஓலை மற்றும் பிற பாகங்களை அகற்றி அழிக்க வேண்
 
                 
              
                இராசயன முறை:
                
               
              
                - கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கவும்: 
                  
                    - மாலத்தியான் 50 EC - 2 மி.லி/ லி 
 
                     
                    - டைமெத்தோயேட் 30 EC -1 மி.லி /லி 
 
                     
                    - மெத்தில் டெமட்டான் 25 EC - 1 மி.லி / லி 
 
                     
                    - பாஸ்போமிடான் 40 SL - 1.25 மி.லி / லி
 
                    - மீத்தோமைல் 25 EC - 2 மி. லி/லி 
 
                     
                    - 3% வேப்ப எண்ணெய்
 
                   
                 
                 
  | 
           
         
         
 |