இலைப்பேன்: சிர்ட்டோதிரிப்ஸ் டார்சாலிஸ் 
                சேதத்தின்  அறிகுறிகள்: 
              
                - தாக்கப்பட்ட இலைகள் இளஞ்சிவப்பு       நிறமாக மாறும்.
 
                - இலைகளில் வெண்ணிறப் புள்ளிகளை உண்டாக்கும்.
 
                - பூக்கள் உதிர்ந்து விடும்.
 
               
              பூச்சியின்  விபரம்: 
              
                - இளம் குஞ்சுகள்: மிகச்சிறிய, நீளமானது எளிதில் உடைகிற  உடலினை உடையது. 
 
                - வைக்கோலின் மஞ்சள் நிறம் போன்று இருக்கும்.
 
                - பூச்சி : மயிரிழைகளால் ஆன இறகுகளை உடையது.
 
               
              
              கட்டுப்படுத்தும்  முறைகள்:
              
                - தாக்கப்பட்ட இலை மற்றும் கிளைகளை       அகற்றவேண்டும்.
 
                - டைமீத்தோயேட் அல்லது மீதைல் டிமேட்டான்       2 மிலி / லிட்டர் தெளிக்கவும்.
 
                | 
              |