சொறி நோய்: ஸ்சண்தோமோனஸ் கேம்பஸ்ட்ரைஸ்  பிவி சிட்ரை 
              அறிகுறிகள் 
              
                -  சொறி நோயினை ஏற்படுத்தும் பேக்டீரியா  இலைத்துளைகள் (Stomata) மூலமாகவோ பூச்சி மற்றும் காற்றில்  அசையும் முட்களினால் ஏற்படும் காயங்கள் மூலமாகவோ ஊண் ஊட்டும் தாவரத்திற்குள்  (Host) நுழைகிறது.
 
                -  இவை இலையின் உயிரணுக்களுக்கிடையேயுள்ள  இடங்களில் (Intercellular Spaces)  இனப்பெருக்கமடைந்து திசுவறையிலுள்ள நடுச்சுவர் (Middle Landla) பகுதியை அழித்து விடுகின்றன. 
 
                - இவை இலையின் புறணிப் பகுதியில்  நிலையாகின்றன. இவ்விடத்தில் சொறி போன்ற வளர்ச்சி  ஏற்பட்டு பேக்டீரியா அதிக அளவில் உற்பத்தி  செய்யப்படுகின்றன.
 
                - இந்நோய்  20 முதல் 350 சென்டிகிரேடு வெப்ப அளவில் நல்ல  மழையுள்ள காலங்களில் அதிமாகக் காணப்படுகிறது. நோய் உண்டாவதற்கு இலைகளில்  குறைந்தது 20 நிமிடங்களுக்கு ஈரம் இருக்க வேண்டும். 
 
                - நோயுற்ற இலையில் பேக்டீரியா 6 மாத  காலத்திற்கு அழியாமல் இருக்கின்றது. பேக்டீரியா நோயுற்ற சிறுக் குச்சிகளில்  அதிக நாட்கள் அழியாமல் தங்கியிருந்து  நோய் உண்டாவதற்குக் காரணமாக அமைகின்றது. 
 
                - நோய்  ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு மழைத்துளிகள்,  காற்று, இலைத் துளைக்கும் பூச்சிகள்  (Leaf Miners) முதலியன மூலமாகப் பரவுகிறது. நோயுற்ற கன்றுகளை நடப்  பயன்படத்துவதாலும் நோய் எளிதில் பரவுகின்றது.
 
              | 
              
                
               |