கரணை  நோய்: எல்சினோ ஃபசெட்டி 
              அறிகுறிகள்: 
              
                - இலைகள், குச்சிகள் மற்றும் ஆரஞ்சுப்  போன்ற பழவகைகளை இந்நோய் தாக்கும்
 
                - மழைக் காலங்களில், புளிப்பான ஆரஞ்சு,  எழுமிச்சை, ஆரஞ்சு வகைப் பழங்கள், திராட்சை, ஆகியவை எளிதில் பாதிக்கக் கூடியவை
 
                - இந்நோய், முதலில் இளஞ்சிவ்ப்புப் புள்ளியாக  காணப்படும்
 
                - இலை திசுக்கள் உருக்குழைந்து, புண் போன்று  காணப்படும்
 
                - இவ்வாறு நோயினால் தாக்கப்பட்டு உருக்குழைந்த  இலைகளின் திசுக்கள் மேலும் தழும்பு போன்ற நிறத்தில் தோன்றி பின்பு அடர்ந்த பச்சை  நிறத்தில் காணப்படும்
 
                - பொதுவாக இலையின் அடிப்புறத்தில் புள்ளி  போன்று காணப்படும். பின்பு இப்புள்ளிகள் இலையில் ஊடுரவி இருபுறம் காணப்படும்
 
                - பாதிக்கப்பட்ட பகுதிகள், அனைத்துப் பகுதியையும்  இந்நோய் பரவிவிடும். இலைகள் சுருண்டு, உரு மாறியும் மற்றும் வளர்ச்சி குறைந்து காணப்படும்.  குச்சிகளிலும் இதைப்போன்ற புள்ளிகளை பரவச் செய்யும்
 
                - வெளிப்புறத்தில் சொறி போன்று காணப்படும்  பழங்களில் சொறி அல்லது பொடிப் போன்று காணப்படும்
 
                - முதிராத பழங்களில் பால் போன்ற நிறத்திலும்  மற்றும் முதிர்ந்த பழங்களில் அடர்ந்த பச்சை சாம்பல் நிறத்திலும் காணப்படும். இப்பழங்களில்  பிஞ்சு நிலையிலேயே உதிர்ந்துவிடும்
 
               
              கட்டுப்பாடு: 
              
                - கார்பன்டாசிம் 0.1% அளவில் தெளிக்கவும்
 
                | 
              
                
               
               |