பிசின்  வடிதல் நோய் – பைட்டோப்தோரா பேராசிடிகா, பி.பள்மிவோரா, பி. சைட்ரோதோரா 
             
               அறிகுறிகள்: 
              
                - முதல் அறிகுறியாக மரப்பட்டையில் கரும்  கறையாக தோன்றி பின்பு மரக்கட்டை வரை இந்நோய் பரவும்
 
                - மரப்பட்டையின் அடிப்புறத்தில் இந்நோய்  பரவி கம்பி வளையம் போல் தோன்றி மரத்தையே அழித்துவிடும்
 
                - மரப்பட்டைகளின் சில பகுதிகள் வரண்டும்,  சுருங்கி, வெடித்தும் மற்றும் சிறு சிறு துண்டுகளாக காணப்படும்.பின்பு  இதன் விளைவுகள் அதிகரித்து, தண்டு பகுதியில் உள்ள மரப்பட்டையிலிருந்து பிசின் வடிவதை  காணலாம்
 
                - இதன் பாதிப்பு வேரின் நுனி வரை பரவும்
 
                - வெள்ள நீர் பாசனமும் மற்றும் நீர் தேங்கி  இருப்பதால், இதன் தண்டு பகுதிகள் நோய் பாதிப்படைய வாய்ப்புள்ளது
 
                - பூசண வித்துக்கள் மண்ணில் உயிர் வாழும்  இவை பாசன நீராலும், காற்று மூலமாகவும் மற்றும் மழை நீரினாலும் நோய் பரவக் கூடும்
 
               
              கட்டுப்பாடு: 
              
                - பயிர் சாகுபடியின் நோய் தாக்காதவாறு  நுனி வேர்கள் அல்லது அடி தண்டைத் தீங்கு ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும்
 
                - நோயினால் பாதிக்கப்பட்ட மரப்பட்டையை  ½ “ அளவில் அடியோடு அகற்றிவிட வேண்டும்
 
                - தண்டு பகுதியில் உள்ள மரப்பட்டையை போர்டியாக்ஸ்  பசையினை தடவ வேண்டும்
 
                | 
              
                
               |