பயிர் பாதுகாப்பு :: எலுமிச்சை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
எலுமிச்சை வண்ணத்துப்பூச்சி: பாப்பிலியோ, டிமோலியோஸ், பி.பாலிடிஸ். பி. ஹீலென்ஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  •  புழுக்கள்  வெளிர் இளம் இலைகளை விரும்பி உண்ணுகிறது.
  • இதனால் மரத்தின் அனைத்து பகுதியின் இலைகள் உதிர்வு ஏற்படுகிறது

இலைகள் உதிருதல் புழு இலையை உண்ணுதல் நன்றாக வளர்ந்த புழு பூச்சி

பூச்சியின் விபரம்:

  • புழு: இலைகளின் மீது இளம் புழுக்கள் பறவைகளின் எச்சம் போல காணப்படும். முழு வளர்ச்சியடைந்த புழு பச்சையாக இருக்கும்.
  • வண்ணத்துப்பூச்சி: மிக அழகான பச்சைநிற இறக்கையில் மஞ்சளும் கருமையுமான புள்ளிகளுடன் இருக்கும்
முதல் பருவ புழு          இரண்டாம் பருவ புழு மூன்றாம் பருவ புழு       நான்காம் பருவ புழு

கட்டுப்படுத்தும் முறை:

  • கையினால புழுக்கள் தொற்றுள்ள பகுதியை பிடுங்கி அழிக்க வேண்டும்.
  • முதல் தோலுரிப்பு இடைப்பருவம் - 1 மிலி DDVP(Nuvan)  தெளிக்க வேண்டும்
  • ஒட்டுண்ணிகளான ட்ரைகோகிராமி வனிசன்ஸ் மற்றும் முட்டையின் மீது டெலினோமுஸ்ப், புழுக்களுக்கு ப்ராசிமிரியாஸ்ப் , கூட்டுபுழுக்களுக்கு ப்டெரொல்ஸ்  விடவேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015