இலை துளைப்பான்: பில்லோக்னிஸ்டிக் சிட்ரில்லா 
              தாக்குதலின் அறிகுறிகள்: 
              
                - புழுவானது இளம் இலையை தாக்கி அதன் வெளித்தோலை உண்கிறது
 
                - இலையின் கீழ் பகுதியில் வெள்ளி நிற தோற்றத்தை உருவாக்குகிறது
 
                - இலையானது உருசிதைந்த , சுருங்கி  காணப்படும்
 
                - இதன் தாக்கத்தினால் இலை உதிர்வு ஏற்படுகிறது
 
                - சிட்ரஸ் கேங்கர் நோயை ஊக்குவிக்கிறது 
 
               
              பூச்சியின் விபரம்: 
              
                - முட்டை: சிறியது, கீழ் பக்கத்தில் தட்டையான அமைப்பை உடையது 
 
                - புழு: மிகச்சிறியதாக கால்கள் இன்றி இலையின் மேற்புறத்தில் உள்ள மெல்லிய தோலுக்கும் கீழே காணப்படும்.
 
                - தாய்ப்பூச்சி: சிறியதாக முன் இறக்கைகளின் நுனியில் ஒவ்வொன்றிலும் ஒரு கரும்புள்ளியுடன் இருக்கும்.
 
               
              கட்டுப்படுத்தும் முறை: 
              
                - பென்வாலரெட் 0.2 மிலி அல்லது டைமீத்தேட் (ரோகர்) 2மிலி/லிட்டர் தெளிக்க வேண்டும். 
 
                - வேப்பம் பிண்ணாக்கு நீர் (அ) வேப்பங்கொட்டை வடிநீர் 5 சதம் (50 மிலி / 1 லி) நீர் கலவை தெளிக்கலாம்.
 
               
              | 
              
              
              
                 | 
                 | 
               
              
                | இலைத் துளைக்கும் புழு | 
                சுருக்கமடைந்த இலைகள் | 
               
              |