| பயிர் பாதுகாப்பு  ::  எலுமிச்சை பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            மாவுப்பூச்சி: ப்ளானோகாக்ஸ்  சிட்ரி 
              தாக்குதலின்அறிகுறிகள்: 
              
                -  இளம் பூச்சிகள், முதிர்ந்த பூச்சிகள் மரத்தின் கிளை மற்றும் பழங்களின் சற்றை உறுஞ்சுகிறது
 
                - வெளுத்த நிறத்தில் மாறிவிடும்
 
                - பாதிக்கபட்ட மரத்தின் பகுதியானது காய்ந்துவிடும்.
 
                - அடர்ந்த அச்சு பூஞ்சையால் அதிகளவு தேன் போன்ற திரவம் வளர்ச்சியடைகிறது
 
                - பூஞ்சையானது தழை மற்றும்  பழங்களை  சூழ்ந்திருக்கும்
 
                - பாதிக்கப்பட்ட பூக்களானது பழங்களை உருவாக்குவதில்லை
 
               
              பூச்சியின்விபரம்: 
              
                - முட்டை: முட்டையானது கூட்டாக பஞ்சு போன்ற இழையால் மூடபட்டிருக்கும்
 
                - இளம்பூச்சிகள்: நிமினை நிறத்தில் வெண்மை நிற மெழுகு பூசப்பட்ட இழையுடன் கூடியது.
 
                - பூச்சிகள்: ஆண் பூச்சியானது இறக்கையுடன் கூடிய, நீள உணர்கொம்புகள் கொண்ட  வாய் பகுதி அற்று காணப்படும், பெண் பூச்சியானது இறக்கை அற்ற , நேரான உடல் கொண்ட  சிறிய, மெழுகு இழையுடன் கூடிய கோடு காணப்படும்.
 
              | 
            
                 
                
                
                
                
              
                
                   | 
                   | 
                 
                
                  பழங்களின் மீது மாவுப்பூச்சிகளின் முட்டை கூட்டம்   | 
                  பெண் பூச்சி மற்றும் இளம் பூச்சிகள்  | 
                 
              | 
           
          
            கட்டுப்படுத்தும் முறை: 
              
                - பாதிக்கப்பட்ட கிளை, தண்டு மற்றும் இலை பகுதியை அழிக்க வேண்டும்.
 
                - பட்டை நீக்கப்பட்ட கிளைகளில் மெத்தைல் பாராதியான் பசையை பூச  வேண்டும்
 
                - பழத்தை தாங்கியிருக்கும் தண்டின் மேல் ஒட்டும் பொறியை(5 செ.மீ நீளம்) பயன்படுத்த வேண்டும்.  
 
                - 25கி/லி மீன் எண்ணெய் ரோசின் சோப்புடன்  0.2% டைகுளோர்வாஸ் சேர்த்து தெளிக்க வேண்டும்.
 
                - க்ளோரோபைரிபோஸ் கொண்டு  மண் நேர்த்தி செய்ய வேண்டும்.
 
                மரத்திற்கு அசிபேட், மெத்தொனைல், அல்லது க்ளோரோபைரிபோஸ்  தெளிக்க வேண்டும். 
                - ஒரு மரத்திற்கு 10 ஆஸ்திரேலியன், கிரிப்டோலீமஸ் மாண்ட்ரோசியரி எனும் இரைவிழுங்கி வண்டுகளை மரத்திற்கு  வீதம்விடலாம் .
 
              | 
           
               
  |