எலுமிச்சை கருப்பு ஈ: அலிரோகேன்தஸ்  வோக்லுமி 
               
              தாக்குதலின் அறிகுறிகள்: 
              
                - இலைகளில் உள்ள சாற்றை உறுஞ்சுகிறது 
 
                - இலைகள் சுருண்டிருக்கும் 
 
                - இலை முதிர்வுக்கு முன்னதாகவே உதிர்ந்து விடுகிறது. 
 
                - அடர்ந்த அச்சு பூஞ்சையால் தேன் போன்ற திரவம் வளர்ச்சியடைகிறது.
 
                - இலையின் நிறம் கருப்பாக மாறிவிடும் மற்றும் இலைகள் ஒளிச்சேர்க்கை நடவடிக்கை பாதிக்கிறது 
 
                - பாதிக்கப்பட்ட மரங்களின் - சில பூக்களிலிருந்து சுவையற்ற  பழங்கள் உருவாகலாம்
 
               
              பூச்சியின் விபரம்: 
              
                - இளம் பூச்சிகள்: தட்டையான வடிவம் மற்றும் அளவில் முட்டை போன்ற தோற்றத்தில் காணப்படும் 
 
                - பூச்சிகள்: சிறிய பூச்சி, உடலில் சாம்பல் தூசி கொண்டு மென்மையான கருப்பு நிறத்தில் காணப்படும். இறக்கையானது வயிறு நுனி கடந்து இருக்கும்.
 
               
              கட்டுப்படுத்தும் முறை: 
              
                - பாதிக்கப்பட்ட மரத்தின் பகுதிகள், புழுக்கள்  ம்ற்றும் பூச்சிகளை சேகரித்து அழிக்க வேண்டும் 
 
                - ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி குளோர்பைரிபாஸ் சேர்த்து தெளிக்க  வேண்டும்
 
                - மரத்தின் அனைத்து கிளைகளிலும் திரவம் கொண்டு நனைக்க வேண்டும்
 
                - ஒட்டுண்ணிகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும்., என்கர்சியா SP , எரிட்மோசிரியஸ்சிரியஸ் மற்றும் கிளைசோபெர்லா  SP
 
                | 
            
              
                 | 
                  | 
                 | 
               
              
                இலையில் கருப்பு ஈக்கள்    | 
                கருப்பு ஈக்கள்  | 
                 
              |