பாக்டீரியா மென்மை அழுகல் நோய்:  எர்வினியா கராட்டாவோரா சப் ஸ்பீசிஸ் கராட்டாவோரா             
             | 
          
          
            தாக்குதலின் அறிகுறிகள்:
              
                - இலை நரம்புத் திசுக்கள் கருப்பாகிறது. இதைத் தொடர்ந்து இலை இரத்த சோகை மற்றும் நசிவு ஏற்படுகிறது.
 
                - உள்ளுக்குள் அடர் பழுப்பு நிறமாற்றம் ஏற்படும் 
 
                - தண்டு பிளவு உருவாகின்றன- கிளைகள் உடையும் 
 
                - வாடச்செய்தல் மற்றும் காய்ந்து போகுதல் 
 
                - பழம் மஞ்சரிக்காம்பு- மிகவும் ஏதுவாக மற்றும் நோய் தாக்குதலுக்கான முதல் இடம் 
 
                - பழுத்த மற்றும் பசுமையான பழங்கள் பாதிக்கப்படுகிறது 
 
                - ஆரம்பத்தில், பழம் காயங்கள் நீர் நனைத்த, மற்றும் ஓரளவு பள்ளமான அடர் கருப்பு நிறத்தில் இருக்கும்.
 
                - பிந்தைய காலங்களில், பாக்டீரியா கசிவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து உருவாகி, அழுகின திசுக்களாக மாறுகிறது
 
            - பாதிக்கப்பட்ட பழம் தண்ணீர் நிரப்பப்பட்ட பை போன்று தொங்கிவிடும் 
   | 
          
          
            
              
                |   | 
                  | 
                  | 
                  | 
               
              
                |   | 
                மஞ்சரிக்காம்பு மீது மென்மையான திசு | 
                நீர் நனைத்த மூழ்கிய புள்ளிகள் | 
                அழுகிய மிளகாய் | 
               
              | 
          
          
            நோய் காரணி:
                          
              
                - பாக்டீரியா -ve, கோலை வடிவில் 1-6 பெரிய புறச்சுற்றில் நகரிழைகள் கொண்டு இருக்கும்.
 
                | 
          
          
            கட்டுப்படுத்தும் முறை: 
            
              நோயின் தாக்கம் குறைக்க: 
              
                - அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல்
 
                - கிளை கத்தரிப்பு கருவிகளை கிருமி நீக்கம் செய்தல் 
 
                - தாவரங்களை காயப்படுத்துதலை தவிர்க்கவும் 
 
                - விழுந்த, நோயுற்ற இலைகள் மற்றும்  தாவர குப்பைகளை நீக்கவும் 
 
                - விதை நேர்த்தி- 1 % சோடியம் ஹைப்போகுளோரைட்டில் முப்பது நிமிடங்கள் ஊறவைத்து  சுத்தமான தண்ணீரில் கழுவுதல் 
 
                - உருளைக்கிழங்கு அல்லது முட்டைக்கோஸ் பயிர்களை தொடர்ந்து மிளகாய்  பயிர்களை நடவு செய்வதை தவிர்க்கவும் 
 
                - அதற்கு பதிலாக, பீன்ஸ், சோளம் மற்றும் சோயா பயிர்களை சுழற்சி பயிர் செய்யவும்
 
               
              அறுவடை பின் சார் நோய் மேலாண்மை 
              
                - குளோரின் நீர் பயன்படுத்துவதை குறைக்கவும்
 
                - பழங்களை முற்றிலும் காய வைக்கவும் 
 
                - பேக்கிங் மற்றும் சேமிப்பின் போது பழங்களை குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும
 
                  
              | 
          
          
            Source of Images: 
            www.avrdc.org/download/publications/crop-guides/peppers/bact_rot.pdf 
            http://aciar.gov.au/files/mn-157/pdf/TECCIPM-14-%2818Dec13%29-bacterial-diseases.pdf  |