| பயிர் பாதுகாப்பு  :: மிளகாய் பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            | கடலைப்புழு: ஹெரிக்கோவெர்பா ஆர்மிஜிரா | 
           
          
            தாக்குதலின் அறிகுறிகள்: 
              
                - இளம்      புழுக்கள் இளம்தளிர் மற்றும் இலைகளை சாப்பிடும்
 
                - வளர்ந்த      புழுக்கள் காய்களில் துளையிட்டு சாப்பிடும
 
               
              பூச்சியின் விபரம்: 
              
                - முட்டை: பெண் அந்துப்பூச்சி சொரசொரப்பான வெள்ளைநிற      முட்டைகளை தனித்தனியே இளம் இலையின் மேற்பகுதியில் இடுகின்றது
 
                - புழு: பச்சை மற்றும் பழுப்பு நிற வேறுபாடுகளை      தோற்றுவிக்கும். வளர்த்த புழுக்கள் பச்சை நிறமாகவும் உடலின் பக்கவாட்டில் சாம்பலி      நிறக் கோடுகளுடன் காணப்படும்
 
                - கூட்டுப்புழு:  கூட்டுப்புழு பழுப்பு நிறத்தில்,      மண், இலை மற்றும் பண்ணைக் கழிவுகளில் காணப்படும்
 
                - முதிர்பூச்சி : பெண் அந்துப்பூச்சி வெளிர் பழுப்பு      நிறமாக இருக்கும், ஆண் அந்துப்பூச்சி வெளிர் பச்சை நிறத்தில் “V” வடிவக் கோடுகள்      இருக்கும்.
 
               
              கட்டுப்படுத்தும் முறை: 
              
                - சேதப்படுத்தப்பட்ட      காய்கள் மற்றும் வளர்ந்த புழுக்களை சேகரித்து அழிக்கவும்.
 
                - இனக்கவர்ச்சிப்பொறி      “ஹெலியூர்” ஹெக்டேருக்கு 15 வைக்கவும்
 
                - முட்டை      ஒட்டுண்ணியான டிரைக்கோகிராம்மா கைலோனிஸ் ஹெக்டேருக்கு 50000 அளவில் வாரம் ஒரு முறையாக 6 முறை வயலில் விடவேண்டும்.
 
               
              
                - இறை விழுய்கியான க்ரைசோபேர்லா கார்னியா வை விதைத்த 30 நாட்களுக்கு பிறகு 50,000 முட்டை அல்லது இளம்புழு என்ற வீதம் ஒரு வார இடைவெளி விட்டு வயலில் விடவும்.
 
               
              
                - ஹெலிக்கோவெற்பா      என்.பி.வைரஸ் ஹெக்டேருக்கு 1.5x1012 புழு சமன் அளவில் மாலை வேலையில்      தெளிக்கவும் அல்லது கீழ் காணும் ஒரு பூச்சிகொல்லி மருந்தினை தெளிக்கவும்.
 
               
              
                - கார்ப்ரைல் 50 WP 2 கி/லி அல்லது பே.துர்ஜியான்சிஸ் 2 கி/லி என்ற விதம் தெளிக்கவும்.
 
                - நச்சு உணவு: கார்ப்ரைல் 1.25 கி.கி,அரிசித்தவிடு 12.5 கி.கி பனஸ்கட்டி 12.5கி.கி பனங்கட்டி1.25 கி.கி மற்றும் நீர் 7.5 லி என்ற வீதம் கலந்து ஒரு எக்டருக்கு தெளிக்கவும்
 
                - பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியைத் தெளிக்கவும்
 
               
              
                
                  | பூச்சிகொல்லி | 
                  அளவு | 
                 
                
                  | இமாமெக்டின் பென்சோவேட் 5 % SG | 
                  4 மி / 10 லி | 
                 
                
                  | ப்ளுபென்டையமைடு 20 WDG | 
                  6.0 கி /10 லி | 
                 
                
                  | இடாக்ஸ்சோகார்ப் 14.5 % SC | 
                  6.5 மி / 10 லி | 
                 
                
                  | நோவல்லுரான் 10 % EC | 
                  7.5 மி / 10 லி | 
                 
                
                  | ஸ்பினோசேடு 45 % SC | 
                  3.2 மி / 10 லி | 
                 
                
                  | தையோடைகார்ப் | 
                  2.0 கி / லி | 
                 
                | 
            
                
  | 
           
         
         
 |