தாக்குதலின் அறிகுறிகள்: 
              
                - முட்டையிலிருந்து      வெளிவரும் புழுக்கள் இலையின் பச்சையத்தை சுரண்டி சாப்பிடும்
 
                - இலைகளை      சல்லடை போல் அரித்து வெள்ளை நிறத்தில் இலையின் நரம்புகள் மட்டும் இருக்கும்
 
                - வளர்ந்த      புழுக்கள் இலைகளில் சிறு துளைகளை விட்டு சாப்பிடும்
 
                - வளர்ந்த      புழுக்களின் தாக்குதல் தீவிரமானால் செடி முழுதையும் கண்டபடி சாப்பிடும்
 
               
              பூச்சியின் விபரம்:  
              
                - முட்டை: தாய்ப்பூச்சி இலையில் சந்தனப் பொட்டு      போன்று குவியலாக முட்டையிட்டு உரோமத்தால் மூடும்.
 
                - புழு: இளம்புழுக்கள் கூட்டமாக ஒரே இடத்தில்      இருக்கும். புழு கருமை கலந்த பச்சையாகவும், தலைப்பகுதிக்குச் சற்று பின்புறத்தில்      இரண்டு கருப்புப் புள்ளிகளுடனும் உடம்பில் திட்டுத் திட்டான கரும்புள்ளிகளும்      இருக்கும்.
 
                - முதிர்பூச்சி: பழுப்பு நிறத்தில் இருக்கும். முன்இறக்கைகள் கருப்பு      நிறப்பின்னியில் மஞ்சள் நிற குறுக்குக் கோடுகள் இருக்கும். பின்இறக்கைகள் வெண்மை நிறத்துடன் ஓரங்களில்      பழுப்பு நிற பட்டையுடன் இருக்கும்
 
               
              கட்டுப்படுத்தும் முறை:  
              
                - வயலை      உழுது மண்ணில் புதைந்துள்ள கூட்டுப்புழுக்களை வெளிக்கொணர்ந்து அழிக்கவேண்டும்
 
                - வயல்      வரப்பு ஓரங்களில் ஆமணக்கை கவர்ச்சிப்பயிராக பயிரிடவும்.
 
                - ஹெக்டேருக்கு      15 இனக்கவர்ச்சிப்பொறி வைத்து ஆண் அந்துப் புச்சிகளை கவர்ந்து அழிக்கவும்
 
                - முட்டை      குவியல்கள், புழு கூட்டங்களை கையால் சேகரித்து அழிக்கவும்
 
                - மாலை      நேரங்களில் புரோடீனியா என்.பி.வைரஸ் 1.5x1012 புழு சமன் அளவு ஹெக்டேருக்கு      தெளிக்க வேண்டும் அல்லது 
 
                - கீழ்      காணும் ஒரு பூச்சிகொல்லி மருந்தினை தெளிக்கவும்
 
               
              
                
                  | பூச்சிகொல்லி | 
                  அளவு | 
                 
                
                  | இமாமெக்டின் பென்சோவேட் 5 % SG | 
                  4 மி / 10 லி | 
                 
                
                  | ப்ளுபென்டையமைடு 20 WDG | 
                  6.0 கி /10 லி | 
                 
                
                  | இடாக்ஸ்சோகார்ப் 14.5 % SC | 
                  6.5 மி / 10 லி | 
                 
                
                  | நோவல்லுரான் 10 % EC | 
                  7.5 மி / 10 லி | 
                 
                
                  | ஸ்பினோசேடு 45 % SC | 
                  3.2 மி / 10 லி | 
                 
                
                  | தையோடைகார்ப் | 
                  2.0 கி / லி | 
                 
                | 
            
                
                  | 
                  | 
                 
              
                | புழு | 
                 
           
              
                
                  
                      | 
                      | 
                   
                  
                    | கூட்டு  புழு  | 
                    அந்துப்பூச்சி | 
                   
                
               
              
                
                  
                      | 
                   
                  
                    | அறிகுறி | 
                   
                
               
               |