பயிர் பாதுகாப்பு :: மிளகாய் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பச்சை பேரி அசுவிணி : மைசஸ் பெர்சிக்கே

தாக்குதலின் அறிகுறிகள்:

  • அசுவிணி தாக்கப்பட்ட செடிகள் வெளுத்து போய் நோயால் பாதிக்கப்பட்டது போன்று தோற்றமளிக்கும்
  • இலையில் சுருக்கங்கள் ஏற்பட்டு சுருண்டு விடும்
  • அசுவிணி வெளியேற்றும் தேன் துளி கரும்புகைப் பூசணம் ஏற்படுத்துகிறது
  • அசுவிணி தாக்கப்பட்ட செடிகள் குட்டையாகிவிடும்

பூச்சியின் விபரம்:

  • இளம் குஞ்சு: முட்டையிலிருந்து வெளிவருபவை பச்சையாகவும் பிறகு மஞ்சள் நிறமாகவும் மாறிவிடும்
  • பூச்சி: மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • ஒரு கிலோ விதைக்கு இமிடாகுளோபிரிட் 70% WS @ 12கி என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • போரேட் 10% G @ 10 கி.கி/எக்டர் என்று அளவில் தெளிக்கவும்
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியைத் தெளிக்கவும்

இலையில் சுருக்கங்கள்
இளம் குஞ்சு பூச்சி
பூச்சிகொல்லி அளவு
கார்போசல்பான் 25 % EC 1.0 மி/லி
ஃப்ரோனில் 5 % SC 1.0 மி/லி
இமிடாகுளோப்ரிட்17.8 % SL 3.5 மி/10 லி
ஆக்ஸிடெமடான் – மீதைல் 25% EC 1.6 மி/லி
போசலோன் 35 % EC 2.0 மி/லி
குயின்னால்பாஸ் 25 % EC 1.0 மி/லி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016