அஸ்கோகைட்டா இலைக்கருகல்: அஸ்கோகைட்டா ரபியி 
                 
                அறிகுறிகள் 
              
                - செடியின்  அனைத்து பாகங்களும் பாதிக்கின்றன.
 
                - இலையின்  மேல்பரப்பில் அறிகுறிகள், புள்ளிகளாக தோன்றுகின்றன.
 
                - இலையின்  மேல்பரப்பில் வட்டவடிவ பழுப்பு நிறப்புள்ளிகள் காணப்படுகின்றன.
 
                - சாதகமான  சூழ்நிலை வரும் பொழுது இச்சிறிய புள்ளிகள் பெரியதாகி இலைகள், காய்கள் காய்ந்துவிடுகின்றன.
 
                - தண்டு  மற்றும் இலையின் காம்புகளில் இந்நோய்க்கான அறிகுறிகள் தோன்றுகின்றன.
 
                - இந்நோய்  மெதுவாக தாக்கினால் விதைகள் காய்ந்தும், உதிர்ந்தும் விடுகின்றன.
 
                - வயலில்  தங்கியிருக்கும் முந்திய பயிரின் கழிவுகளால் இந்நோய் பரவுகிறது.
 
                 
               
              கட்டுப்பாடு 
              
                - நல்ல  தரமான விதைகளை பயன்படுத்தவேண்டும்.
 
                - பயிர்  சுழற்சி முறையைப் பின்பற்றவேண்டும்.
 
                - ஆழமாக  உழவேண்டும், ஊடுபயிராக, கோதுமை, கடுகு ஆகியவைப் போடலாம்.
 
                - விதையை  கார்பன்டாசிம் 3 கிராம்  / கிலோ என்ற அளவில்  நேர்த்தி செய்யலாம் அல்லது மேங்கோசெப் 3 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம்  அல்லது  உலர் கந்தகத்தை 2.3 கிராம் / லிட்டர்  என்ற அளவில் தெளிக்கலாம்.
 
                | 
              
                
               |