செர்கோஸ்போரா இலைப்புள்ளி நோய்: செர்கோஸ்போரா ரிசினெல்லா 
            அறிகுறிகள் 
          
            - இலைகளில்  சிறிய கருப்பு அல்லது பழுப்பு நிறப் புள்ளிகளைச் சுற்றி வெளிர் பச்சை நிற மோதிர வளையத்தால்  சூழப்பட்டிருக்கும்.
 
            - இலையின்  இரண்டு புறத்திலும் இப்புள்ளிகள் காணப்படும்.
 
            - இப்புள்ளிகள்  பெரியதாகும்போது மத்தியப் பகுதிகள் பழுப்பு நிறத்திலும் பின்பு வெள்ளை நிறத்திலும்  இதனைச் சுற்றி அயர்ந்த பழுப்பு நிறப்பட்டை போன்ற கோடு சூழ்ந்திருக்கும்.
 
            - இப்பூசணத்தின்  அறிகுறிகள் உயர்ந்த புள்ளிகளாகவும் அதில் கருப்பு நிறப்புள்ளிகள் காணப்படும்.
 
            - இப்புள்ளிகள்  அருகருகில் இருந்தால் இலைத்திசுக்கள் இணைந்து, பெரிய பழுப்பு நிற பட்டைப்போன்ற அமைப்பு  உருவாகும்.
 
           
          கட்டுப்பாடு 
          
            - மேங்கோசெப்  0.25 சதவிகிதம் தெளிக்கவேண்டும்.
 
            - இரண்டு  முறை மேங்கோசெப் 2.5 கிராம் / லிட்டர், 10-15 இடைவெளியில் தெளிக்கவேண்டும்.
 
            - விதையை  திரம் அல்லது கேப்டான் 4 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்யலாம்.
 
            | 
          
           |