பயிர் பாதுகாப்பு :: ஆமணக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

சிகப்பு ரோமப்புழு: அமாஸ்க்டா அல்பிஸ்ட்ரைக்கா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • ரோமப்புழு இலையின் அடிப்பகுதியில் காணப்படும்
  • இலையைச் சுரண்டி பச்சையத்தை உண்ணும்
  • நன்கு வளர்ச்சியடைந்த புழு நரம்புபகுதியை மட்டும் விட்டுவிட்டு இடைப்பட்ட பகுதிகளை உண்டு சேதப்படுத்துகிறது

பூச்சியின் அடையாளம்:

  • புழு:பழுப்பு நிறத்திலிருக்கும், உடலின் மேற்பரப்பில் நீளமான சிகப்பு கலந்த பழுப்புநிற முடிகள் உண்டு
  • அந்துப்பூச்சி:அந்துப்பூச்சி வெண்ணிற இறக்கைகளைக் கொண்டிருக்கும்

அமாஸ்க்டா அல்பிஸ்ட்ரைக்கா:

  • பின் இறகு:இறகுகானது வெள்ளை நிறத்துடன் கருப்பு புள்ளிகள் இறகின் நடுவில் ஆங்காங்கே காணப்படும்.
  • முன் இறகு: வெண்மை நிறமாகவும் உடலின் மேற்பரப்பில் பழுப்பு நிறக்கோடும் ஒரங்களில் மஞ்சள் கலந்த பழுப்பு நிறக்கோடுகளும் காணப்படும்.

அமாஸ்க்டா முரி:

  •  முன் இறகு: வெண்மை நிறமாகவும், உடலின் மேற்பரப்பில் பழுப்பு நிறக்கோடும் ,ஒரங்களில் சிகப்பு கலந்த பழுப்பு நிறக் கோடுகளும் காணப்படும்

 

 

 

Crop Protection Oil Castor

 

கட்டுப்படுத்தும் முறை:

  • முட்டைக் குவியலை சேகரித்து அழிக்கலாம், கைகளினால் ரோமப்புழுவை சேகரித்து அழிக்கலாம்
  • திணையை வேலிப் பயிர் ஆக பயிர் செய்வதால் ரோமப்புழுவை கட்டுப்படுத்தலாம்.
  • கோடை உழவு மற்றும் நஞ்சு உணவு மூலம் ரோமப்புழுவை அழிக்கலாம்.
  • விளக்குபொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்
  • கோடைக்காலத்தில் நிலத்தை உழவு செய்து அந்துப்பூச்சியின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்
  • காட்டாமணக்கு அல்லது ஐபோமியாஆகியவற்றை கவர்ச்சிப்பயிராக அமைத்தால் ரோமப்புழு இடம்விட்டு இடம் செல்வதைத் தவிர்க்கலாம்
  • நச்சு உணவை அமைத்து (10 கிலோஅரிசிதவுடு + 1 கிலோபனங்கட்டி + 1 லிட்டர்குயினால்பாஸ்) அந்துப்பூச்சியை அழிக்கலாம்
  • கார்பரில் அல்லது குயினால்பாஸ் இவற்றில் ஏதேனும் ஒரு தூளை எக்டர்க்கு 25 - 30 கிலோ வீதம் தூவி இளம் ரோமப்புழுவைக் கட்டுப்படுத்தலாம்
  • டைகுளோரோபாஸ் 200 மிலிமருந்தை 400 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் வளர்ச்சியடைந்த ரோமப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்
  • குயினால்பாஸ், டைமீத்தேயேட் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015