பயிர் பாதுகாப்பு :: ஆமணக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

ஆமணக்கு முட்புழு: ஏர்கோலிஸ் மெரியோன்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • முட்புழு இலையைத் தின்று சேதப்படுத்தும்

பூச்சியின் அடையாளம்:

  • புழு: பச்சை நிறத்திலிருக்கும், உடல் முழுவதும் கொத்து கொத்தாக பிளவு பட்ட ரோமங்கள் காணப்படும்
  • அந்துப்பூச்சி: பழுப்பு வண்ணத்துடன் இறக்கைகளின் குறுக்காக அலை அலையாய் வளைந்த கோடுகள் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

  • ஆரம்ப நிலையில் ரோமப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேப்பம் கொட்டை சாறு  5 சதம் தெளிக்கவும்
  • குளோர்பைரிபரஸ் அல்லது குயினால்பாஸ் 2 மிலி மருந்தை அல்லது வேப்பம் எண்ணெய் 5மிலி மருந்தை1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015