பயிர் பாதுகாப்பு :: ஆமணக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
தண்டு மற்றும் காய்த்துளைப்பான்: கொனாகெத்தஸ் பங்க்டிஃபெரர்லிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழு பூக்கும் தருணத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும்
  • புழுக்கள் காய்களையும், காயின் தண்டுகளையும் துளைத்து உட்சென்று தின்று அழிக்கும்
  • புழுக்கள் காய்களின் இடைப்பட்ட பகுதியில் நூலாம் படையின் அடிப்பரப்பில் இருந்து சேதத்தை ஏற்படுத்தும்

பூச்சியின் அடையாளம்:

  • புழு: புழு இளம் பச்சை நிறத்தில் இருக்கும். புழுவின் மேற்பகுதி இளஞ்சிவப்பு நிறத்துடனும் மெல்லிய ரோமங்களுடனும்காணப்படும்
  • அந்துப்பூச்சி: மஞ்சள் நிறமுடையது, முன் இறக்கையில் கரும் புள்ளிகள் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

  • பூக்கும் தருணத்தில் மருந்துத் தெளித்தல் அவசியம்
  • பின்வரும் பூச்சிக்கொல்லியை பூக்கும் பருவத்தில் முன்று முறை முன்று வாரம் இடைவெளி விட்டு தெளிக்க வேண்டும்.
  • மாலத்தையான் 50 2.0 மி.லி/ஹெக்டேர்
  • கார்புரைல் 50 WP @ 2.0 கி.கி/ஹெக்டேர் என்ற அளவில் 1000 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்
Crop Protection - Castor

Crop Protection Oil Castor

Crop Protection - Castor Crop Protection Oil Castor

Crop Protection _ Oil Castor


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015