பயிர் பாதுகாப்பு :: கார்னேசன் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

சிவப்பு சிலந்தி கரையான்

அறிகுறிகள்:

  • சிலந்தி கரையான் கார்னேசன் மலரில் மிக மோசமான விளைவை ஏற்படுத்தும் பூச்சியாகும்.
  • இளம் பூச்சிகள் மற்றும் பூச்சிகள் இலைகளின் அடிப்புறத்திலிருந்து சாற்றை உறிஞ்சுகின்றன
  • தாக்கப்பட்ட இலைகள் வெளியே மஞ்சள் நிறத்தில் தோன்றும். இலைகளின் மேலே பூச்சு போன்றும், நுண்ணிய வலைகள் ஏற்பட்டும் இருக்கும்.
  • தீவிர தாக்குதலின் போது செடிகள் குட்டை வளர்ச்சியுடன் காணப்படும்.

கட்டுப்பாடு:

  • பொருளாதார சேத நிலை 1 கரையான் /இலை என்ற நிலையை தாண்டும் போது கட்டுபாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • நேரான, தட்டை இலைகளைக் கொண்ட இரகங்களைப் பயன்படுத்துதல்.
  • தோட்டத்தை சுத்தமாக வைத்தல்.
  • நன்றாக காற்று மற்றும் நீர் பசுமைக் கூடாரத்தில் அளித்தல் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
  • டைக்கோபால் 18.5 கிகி 2மிலி/லிட்டர் (அ) நனையும் கந்தகம் 3 கிராம்/லிட்டர் தெளித்தல்.
  • குளோர்பெனாபிர் 10கிகி 900மிலி/ஹெக்டர் என்ற அளவில் தெளித்தல்.
  • ப்ளுவாலிநேட் 25 கிகி 50 மிலி/ஹெக்டர் தெளித்தல்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015