கம்பளிப்  புழுக்கள் : யூப்டிரோட் கார்டமோமி, யூ கனரெய்க்கா, யூம்ஃபேபியா 
                சேதத்தின்  அறிகுறிகள்: 
              
                
                  - தழைப்பகுதிகளை உண்டு சேதத்தை உருவாக்கும்.
 
                  - புழுக்கள் கூட்டமாக வாழும் பழக்கமுடையது.       பகலில் நிழல் தரும் மரத்தின் அடிப்பகுதியில் தங்கியிருக்கும். இரவில் இவை கீழே       வந்து ஏலக்காயை சாப்பிடும்.
 
                  - ஏலக்காயை செடியில் உள்ள இலைகள்       முழுவதும் சாப்பிட்டு இலைகளற்று காணப்படும்.
 
                  - இதன் தாக்குதல் அக்டோபர், டிசம்பர்       மாதங்களில் இருக்கும்.
 
                 
                பூச்சியின்  விபரம்: 
                
                  - முட்டை: நிழல் மரங்களின் இலையின் அடிப்பகுதியில்       குவிமாடம் போன்று வடிவுடைய முட்டைகளை இடும்.
 
                  - புழு: கருநீல நிறத்தில் இருக்கும், பழுப்பு       நிறத்தலையுடன், உடலின் மேற்பரப்பில் கூம்பு வடிவில் கொத்து கொத்தாக உரோமங்கள்       இருக்கும்.
 
                  - பூச்சி: அந்துப்பூச்சியின் இறக்கையில் வெளிர்       மஞ்சள் வலைக்கோடுகள் இருக்கும் மேலும் ஓரங்களில்  புள்ளிகள் இருக்கும்.
 
                 
                யூ  கனரெய்க்கா 
                
                  - முட்டை: வெளிர் மஞ்சள் நிற முட்டையை நிழல்       ஏற்படுத்தும் மரங்களின் இலைகளின் அடிப்பரப்பில் இடும்.
 
                  - புழு: கொழுகொழுவென இருக்கும் சிவப்பு       நிறத் தலையில் கருப்பு நிற வி வடிவ தழும்பு இருக்கும்.
 
                  - பூச்சி: அந்துப்பூச்சி பழுப்பு கலந்த மஞ்சள்       நிறத்தில இருக்கும். இறக்கையில் குறுக்கு நெடுக்கான கோடுகள் இருக்கும்.
 
                 
                யூஃபேபியா 
                
                  - புழு: கொழுகொழுவென இருக்கும் கரும்       ஊதா, பழுப்பு நிறத்தில் இருக்கும். தலைக் கருப்பாக இருக்கும். சாம்பல் நிற உரோமங்களை       உடல் முழுவதும் கொண்டிருக்கும்.
 
                  - கூட்டுப்புழு: காய்ந்த இலைகளில் இருக்கும்.
 
                  - பூச்சி: மஞ்சள் நிற அந்துப்பூச்சி, கருப்பு       நிற வளைக்கோடுகளையும் திட்டுக்களை இறக்கையில் கொண்டிருக்கும்.
 
                 
                கட்டுப்படுத்தும்  முறைகள்: 
                
                  - நிழல் தரும் மரங்களில் முட்டையுடன்       உடைய இலைகளைச் சேகரித்து எரித்துவிட வேண்டும்.
 
                  - நிழல் தரம் மரங்களின் அடிப்பகுதியில்       இருக்கும் புழுக்களை சேகரித்து அழிக்கவும்.
 
                  - அந்துப்பூச்சிகளை விளக்குப்பொறி       வைத்துக் கவர்ந்து அழிக்கலாம்.
 
                  - எண்டோசல்ஃபான் அல்லது       மோனோக்குரோட்டோஃபாஸ் அல்லது குவினால்ஃபாஸ் 3 மிலி / லிட்டர் தெளிக்கலாம்.
 
                 
                | 
              |