காய்த்துளைப்பான் : மையுஸ்  வகை 
                சேதத்தின்  அறிகுறிகள்: 
              
                - புழுக்கள் பூங்கொத்து மொட்டுக்கள்,       பூக்கள் மற்றும் காய்களை உண்டு சேதப்படுத்தும்.
 
                - தாக்கப்பட்ட காய்களில் உள்ளிருக்கும்       விதை முழுவதும் சாப்பிட்டிருக்கும். மேலும் காய்களின் மேற்பரப்பில் வட்டவடிவ துளை       இருக்கும், காய்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாக மாறி, அழுகி, மழைக்காலங்களில்       உதிர்ந்து விடும்.
 
               
              பூச்சியின்  விபரம்: 
              
                - முட்டை: கோள வடிவ பச்சைக் கலந்த வெள்ளை       நிறமுட்டை பூச்சரத்தில் இடும்.
 
                - புழு: தட்டையானது, உடல் முழுவதும் மெல்லிய       உரோமங்களைக் கொண்டிருக்கும்.
 
                - கூட்டுப்புழு: சிறியது, பழுப்பு நிறமானது.
 
                - பூச்சி: அந்துப்பூச்சியின் இறக்கைகள் உலோக       நீலநிறத்தல் இருக்கும். இறக்கையின் ஓரங்களில் மெல்லிய வெண்ணிற கோடுகளும், கருப்புத்       திட்டுக்களும் இருக்கும்.
 
               
              Image source: 
              http://sgbug.blogspot.in/2009_08_01_archive.html 
             | 
              |