பயிர் பாதுகாப்பு :: கத்திரி பயிரைத் தாக்கும் பூச்சிகள்
சாம்பல் கூன் வண்டு : மில்லோசிரஸ் சப்பேசியாட்டஸ், மி.டிஸ்கலர்  மி. விரிடனஸ், மி.மேக்குலோசஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலையின் ஓரங்களைக் கடித்துச் சேதம் உண்டாக்குகின்றன
  • புழுக்கள் வேர்களின் நுனிகளைக் கடித்துத் தின்பதால் தாக்கப்பட்ட செடிகள் வாட ஆரம்பிக்கின்றன

பூச்சியின் விபரம்:

  • வண்டின் புழு: சிரிய கால்களற்றது
  • கூட்டுப்புழு: மன் பட்டுக்கூட்டில் கூட்டுப்புழு பருவத்திற்கு செல்லும்
  • பூச்சி: மி.மேக்குலோசஸ்: பசுமை கலந்த வெண்ணிற பின் இறக்கையில் கருங்கோடுகள் காணப்படும்
  • மி.சப்பேசியாட்டஸ்: பழுப்பு நிறத்தில் இருக்கும்
  • மி.டிஸ்கலர்: பழுப்பு நிற இறக்கையில் வென்புள்ளிகள் இருக்கும்
  • மி.விரிடனஸ்: சிரிய பச்சை கூன்வண்டு

தாக்குதலின் அறிகுறிகள் வி- டி சேதம்

மி. சப்பேசியாட்டஸ் மி.டிஸ்கலர்  மி.மேக்குலோசஸ் பூச்சி

கட்டுப்படுத்தும் முறை:

  • கூன் வண்டுகளை சேகரித்து அழிக்கலாம்
  • கடைசி உழவின் போது ஹக்டேருக்கு வேப்பம் புண்ணாக்கு 500 கிலோ கிராம் இடவும்.
  • உட்பரவு அதிகமுள்ள இடங்களில் கார்போஃபிரன 3G குறுனையை ஹெக்டேருக்கு 15 கிலோவை நடவுக்கு பிறகு 15 நாட்கள் கழித்து இடவும்
  • கார்ஃபரில் 50 WP 3 கிராம் + நனையும் சல்ஃபர் 2 கிராம்/லிட்டர் தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016