| பயிர் பாதுகாப்பு  :: கத்திரி பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            | ஹட்டா  / புள்ளி வண்டு : ஹீனோஸ் எபிலாக்னா விஐிங்டியக்டோப்பங்டேட் | 
           
          
                        தாக்குதலின் அறிகுறிகள்: 
              
                - இலைகளின் பச்சையம் சுரண்டப்பட்டு சல்லடை      போல் இருக்கும்
 
                - செடிகளில் வீரியம் குன்றி, நாளடைவில்      காய்ந்து கருகி உதிர்ந்துவிடும்
 
               
              பூச்சியின் விபரம்: 
              
                - முட்டை: மஞ்சள் நிறத்தில், சுருட்டு வடிவில்      இருக்கும்
 
                - வண்டின் புழு: மஞ்சள் நிறத்தில் தட்டைவடிவில் இருக்கும்.      உடலின் மீது 6 வரிசையில் கரிய நிறத்தில் முள்போன்ற கிளைத்த ரோமங்களைக் கொண்டிருக்கும்.
 
                - கூட்டுப்புழு: மஞ்சள் நிறத்தில் இருக்கும். தலைப்பாகத்தில்      முட்கள் இருக்காது. வால்பாகத்தில் முட்கள் இருக்கும்.
 
                - பூச்சி:அரை கோள வடிவில் பாதி பட்டாணிப் பருப்பு      போல் மங்கலான பழுப்பு நிற இருக்கைகளின் மீது 14 கரும் புள்ளிகள் இருக்கும்
 
               
                 | 
           
          
            
              
                  | 
                  | 
                  | 
                  | 
               
              
                | இலைகள் சல்லடை போல் மாறுதல் | 
                பூச்சி  | 
                 
              | 
           
          
            கட்டுப்படுத்தும் முறை: 
              
                - இலைகளில் உள்ள வண்டினப்புழுக்களையும்,      முட்டை கூடுகளையும் சேகரித்து அழிக்கவும்
 
                - செடிகளை உழுக்கி, வண்டினப்புழுக்கள்,      கூட்டுப்புழு மற்றும் பூச்சிகளை கீழே விழச்செய்து அழிக்கவும்
 
                - பின்வரும் ஏதேனும் ஓரு பூச்சிக்கொல்லியை      நடவு செய்த ஒரு மாதத்திற்கு பிறகு 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்கார்பரில்      3 கிராம்/லிட்டர் பூச்சிக்கொல்லியை தெளிக்கவும் 
 
              | 
           
         
         
 |