பயிர் பாதுகாப்பு :: கத்திரி பயிரைத் தாக்கும் பூச்சிகள்
குருத்து மற்றும் காய்த்துளைப்பான்: லூசினோடஸ் ஆர்பொனாளிஸ்

சேதத்தின் அறிகுறிகள் :
  • இளம்குருத்து வாடிக் காணப்படும்/நடுக்குருத்து காய்தல்
  • குருத்து மற்றும் காய்களை துளைத்து அதனுள் உள்ள திசுக்களை உண்டு கழிவை துளைக்கு வெளியே தள்ளும்.
  • மொக்கு மற்றும் சிறு காய்கள் உதிர்ந்து விடும்
  • இலைகள் வாடி, காய்ந்து விடும்.
Click to view more Images

பூச்சியின் விபரம் :

  • முட்டை: வெண்ணிற முட்டை
  • புழு: சிவப்புக் கலந்த ஊதா நிறத்துடனும் பழுப்பு நிற தலையுடன் இருக்கும்.
  • கூட்டுப்புழு: சாம்பல் நிற, படகு வடிவ பட்டுக்கூடு
  • பூச்சி: நடுத்தரமான அந்துப்பூச்சி. முன் இறக்கைகள் முககோன வடிவ, பழுப்பும் மற்றும் சிவப்பு நிற அடையாளங்கள் காணுப்படும். பின் இறக்கைகள் வெண்ணிறத்தில் கரும் புள்ளிகள் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • ாதிக்கப்பட்ட அல்லது சேதப்பட்ட இளங்குருத்து அல்லது நுனித்தண்டு மற்றும் சேகரித்து அழிக்கவும்.
  • ஒரே நிலத்தில் தொடர்ச்சியாக கத்திரி பயிரிடுவதை தவிர்க்கவும்
  • உட்பரவல் அதிகமாக உள்ள இடங்களில் நீளம் மற்றும் குறுகலான காய் உள்ள ரகங்களை பயிரிடவும்.
  • ஒரு ஹெக்டேருக்கு 12 இனக்கவர்ச்சிப் பொறி அமைக்கவும்.
  • ப்ரைஸ்டோமரஸ் டெஸ்டுசியஸ் மற்றும் செராமஸ்டஸ் பெலவோரிப்டெலில் ஒட்டுண்ணியைக் கொண்டு கட்டுப்படுத்தலாம்.
  • செயற்கை பயிரித்திரைடு உபயோகிப்பதை தவிர்க்கவும்.
  • காய்முதிர்ச்சி மற்றும் அறுவடை நேரங்களில் பூச்சிக்கொல்லி உபயோகிப்பதை தவிர்க்கவும்
  • வேப்பம் கொட்டை வடிநீர் 5 சதம் தெளிக்க வேண்டும்
  • பின்வரும் ஏதேனும் ஓரு பூச்சிக்கொல்லியை நடவு செய்த ஒரு மாதத்திற்கு பிறகு 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்
பூச்சிகொல்லி அளவு
ஆசாடிராக்டின் 1.0 % EC (10000 ppm) 3.0 மி / லி
ஆசாடிராக்டின் 0.03 % WSP (300 ppm) 5.0  கி / லி
க்லோர்பைரிபாஸ் 20 % EC 1.0  மி / லி
டைமெத்தொயேட் 30 % EC 7.0  மி / 10 லி
எமாமெக்டின் பென்ஜொவேட் 5 % SG 4 கி / 10 லி
ப்ளுபென்டையமைய்டு 20 WDG 7.5 கி / 10 லி
போசலோன் 35 % EC 1.5  மி / லி
குயின்னால்பாஸ் 25 % EC 1.5 மி / லி
தயோடிகார்ப் 75 % WP 2.0 கி / லி
தயோமெட்டான் 25 % EC 1.0 மி / லி
டிரைக்லோரோபான் 50 % EC 1.0 மி / லி
டிரையாசோபாஸ் 40 % EC 2.5 மி / லி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016