| 
            
             வேர் அழுகல் நோய் 
            
             நோய்க் காரணி மாக்ரோபோமினா பேஸியோலினா(ரைசாக்டோனியா பட்டாடிகோலா). 
            
            
            
              
                
                  அறிகுறிகள் 
                    
                      - நோயுற்ற பயிர்கள் ஒரு வயலில் திட்டுத்திட்டாகவோ அல்லது ஒரு பகுதி முழுவதுமாகவோ காணப்படும்.
 
                      - நோயுற்ற் செடிகள் பிடுங்கிப் பார்த்தால் இதன் வேர்கள் அழுகியிருப்பதைக் காணலாம்.
 
                      - வேர்களின் பட்டை உரிந்து நார், நாராக கிழிந்திருப்பதே இந்நோயின் தலையாய அறிகுறியாகும்.
 
                      - நோயுற்ற செடியின் தண்டுப் பகுதியில் வெள்ளி பூசியது போன்ற வெண்மையாக பூஞ்சாண வளர்ச்சியைக் காணலாம்.
 
                      - தோல் உரிந்த பட்டைகளின் மேல் மிகச்சிறிய கரும்புள்ளிகள் பதிந்திருப்பதைக் காணலாம்.
 
                      - பூக்கும் பருவத்தில் நோய் தோன்றினால் காய்கள் முற்றாமல் சுருங்கி காணப்படும்.
 
                      - விதைகள் எடை குறைவதுடன், புரதச்சத்தும் குறைந்து விடும்.
 
                      - பரவுதல் மண், விதை, காற்று மற்றும் நீர் மூலம் பரவக்கூடியது.
 
                      விதை நேர்த்தி  
                      - டிரைக்கோடெர்மா விரிடி டால்கம் பவுடர் 4கிராம் அல்லது சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் 10 கிராம் அல்லது கார்பன்டாசிம் அல்லது திரம் 2கிராம், 1 கிலோ விதைக்கு
 
                      
                     உயிரியல்முறை 
                       - சூடோமொனாஸ் ஃபுளுரசன்ஸ் அல்லது டிரைகோடெர்மா விரிடி(2.5 கிலோ, ஹெக்டேர்) 50 கிலோ நன்கு மக்கிய தொழுவுரம்(அ) மணலில் கலந்து விதைத்த 30 நாட்கள் கழித்து இட வேண்டும்.
 
       இரசாயன முறை 
                                            
    - பாதிக்கப்பட்ட இடத்தில் கார்பென்டாசிம் 1 கிராம், 1 லிட்டர் என்ற விகித்தில் கலந்து ஊற்ற வேண்டும்.
 
                                            
                                            
                      
                     
                     | 
                    
                   
  | 
                 
                |