| 
             ஆந்தரக்னோஸ் இலைப்புள்ளி நோய் 
            நோய் காரணி கொலிட்டொடிரைக்கம் லிண்டிமுத்தியானம் 
              
                
                  நோயின் அறிகுறிகள் 
                    
                      - இலைப்புள்ளிகள் செர்க்கோஸ்கோரா இலைப்புள்ளியை விட சற்று பெரிதாக காணப்படும்.
 
                      - இந்நோய் பயிரின் வேரைத் தவிர்த்து எல்லா பாகங்களையும் தாக்கும். 
 
                      - விதையிலைகளில் கருஞ்சிவப்பு புள்ளி தோன்றி நாளடைவில் காய்ந்து விடும்.
 
                      - இலைகளில் செவ்வக வடிவில் பழுப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றி பின் படர்ந்து இலைக்காம்புளையும் தாக்கும். 
 
                      - நோய் அதிகரித்தால் காய்களில் கருஞ்சிவப்பு புள்ளிகள் தோன்றும்.  விதைகளை நிறமாறி காணப்படும். 
 
                      - நோய் தாக்கப்பட்ட பாகங்களில் பூசண வித்து தொன்றும் அசர்யுலை காணப்படும்..
 
                      
                     
                    பரவுதல் 
                    
                      - நோயுற்ற செடியிலிருந்து மற்றொரு செடிக்கு காற்றின் மூலம் பரவுகிறது.
 
                                            
                   
           தடுப்பு முறைகள் 
                      - நோயின் அறிகுறி தோன்றியுவுடன் எக்டருக்கு மான்கோசெப் 1000 கிராம் (அ) கார்பன்டாசிம் 250 கிராம்.  தெளித்தல் வேண்டும். 
 
                      
                      - தேவை ஏற்படின் மீண்டும் ஒரு முறை 14 நாட்கள் இடைவெளியில் தெளித்தல் வேண்டும். 
 
                                            
                    | 
                    
                     | 
                 
                |