| பயிர் பாதுகாப்பு  :: கொண்ட கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
                
                  | கரையான்: ஒடோன்டோடெர்மஸ் ஒபிஸிஸ் | 
                 
                
                  
                    
                      அறிகுறிகள் 
                        
                          - வேர்  மற்றும் தண்டை துளைத்து உண்பதால் விரைவில் பயிர்கள் வாடிவிடும்.
 
                          - வறட்சிக்  காலத்தில் முக்கியமாக பயிர்களைத் தாக்கும்.
 
                          | 
                       
                     
                    பூச்சியின் விபரம் 
                    
                      - கரையான்  புற்றுக்களில் உயிர் வாழும்.
 
                      - மண்ணில்  மற்றும் பயிர்களில் முட்டைகளை இடுகின்றன.
 
                      - வேலையாட்கள்  பூச்சி சிறியதாக (4 மி.மீ), மென்மையாக, வெள்ளைநிற உடம்புடன், பழுப்புநிறத் தலையுடன்  காணப்படும்.
 
                      | 
                    
                     | 
                 
                
                  கட்டுப்பாடு 
                    
                      - இடை  உழவு முறைகளை அடிக்கடி செய்ய வேண்டும்.
 
                      - விதைப்பதற்கு  முன் பாசனம் செய்ய வேண்டும்.
 
                      - வயல்  சுகாதாரம், பயிர் குப்பைகளையும், மக்காத பயிர்களையும் அந்தந்த நேரத்தில் அழித்து விட  வேண்டும்.
 
                      - மக்காத  பண்ணை உரம் அல்லது கம்போஸ்ட் உரங்களை பயன்படுத்தக் கூடாது.
 
                      - 2  – 3 முறை ஆழமாக உழவு செய்ய வேண்டும்.
 
                      - வயலைச்  சுற்றியுள்ள கரையான் புற்றுக்களை அழிக்க வேண்டும்.
 
                      - குளோர்பைரிபாஸ்  ஒரு கிலோ விதைக்கு 4 மிலி என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
 
                   
  | 
                 
                | 
           
        |