| பயிர் பாதுகாப்பு  :: கொண்ட கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
                
                  |  அரைக் காவடிப்புழு: ஆட்டோக்ராபா நைகிரிஸிக்னா | 
                 
                
                  அறிகுறிகள்: 
                  
                    - எலும்புக்கூடு போன்ற இலைகள், செடிகள்  வெள்ளை நிறமாக மாறும்
 
                    - இளம் புழுக்கள் இலை மொட்டு, பூக்கள்,  இளம் காய்கள், வளரும் விதைகளை உண்ணும்
 
                    - சிதலமடைந்து, ஒழுங்கற்ற காய்கள் தோன்றும்  (இது பச்சைக்காய்ப் புழுவின் அறிகுறிகளுக்கு மாறுபட்டு இருக்கும்)
 
                 
பூச்சியின்  விபரம்: 
  - முன்னிறக்கைகள் வித்தியாசமான வடிவமைப்புடன்  காணப்படும்
 
  - புழுக்கள் 25 மி.மீ நீளத்துடன் இருக்கும்
 
  | 
                  
                     | 
                 
                
                  கட்டுப்பாடு 
                    
                      - 10  % பொருளாதாரச் சேத நிலை அடையும் போது கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
 
                      - ஆழமான  வெயில் உழவு 2-3 வருடங்களுக்கு செய்ய வேண்டும்.
 
                      - பருவத்துக்கு  முன்னரே விதைத்தல், குறைந்த வாழ்நாள் உடைய இரகங்களைப் பயிரிடுதல் 
 
                      - நெருக்கமாகப்  பயிரிடுவதை தவிர்க்க வேண்டும்.
 
                      - உயரமான  சோளப்பயிரை பயிரிடுவதால் பறவை தாங்கிகளாக செயல்படும்.
 
                      - புழுக்கள்  மற்றும் தாய்ப்பூச்சிகளை அகற்றி அழிக்க வேண்டும்.
 
                      - இனக்  கவர்ச்சிப்பொறி 50 மீ இடைவெளியில் ஒரு எக்டருக்கு 5 பொறிகள் என்ற விதத்தில் வைக்க  வேண்டும்.
 
                      - ஒரு  எக்டருக்கு 50 பறவை தாங்கிகள் அமைக்க வேண்டும்.
 
                      - விளக்குப்  பொறிகள் 5 ஏக்கருக்கு ஒன்று அமைத்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
 
                      - டிரைக்கோகிரம்மா  கைலோனிஸ் ஒரு எக்டருக்கு, ஒரு வாரத்திற்கு 1.5 இலட்சம் என்ற அளவில் 4 முறையில் அளிப்பதால்  கட்டுப்படுத்தலாம்.
 
                      - பச்சை  கண்ணாடியிறக்கைப் பூச்சி, இறைவிழுங்கிகளான பச்சாடைப்பூச்சி, சிலந்திகள், எறும்புகளை  வளரவிடலாம்.
 
                      - என்.  பி. வி 250 எல். இ  / எக்டர் என்ற விகிதத்தில்  புழுக்களின் ஆரம்ப நிலையில் அளிக்க வேண்டும். என். பி. வி யை 0.1 % டீ பால் சோப் கரைசல்  + கரும்புச் சர்க்கரை 0.5 % என்ற விதத்தில் கலந்து  10 – 15 நாட்கள் இடைவெளியில் பூக்கும் பருவம் ஆரம்பிக்கும் காலத்தில் மூன்று முறை தெளிக்க  வேண்டும்.
 
                      - பி.  டி. 600 கி வேப்ப எண்ணெய்  / புங்கம் எண்ணெய்  80 கி. கி 2 மிலி / லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்
 
                      - வேப்பங்கொட்டைச்சாறு  5%, டிரைஅசோபாஸ் 0.05 %  அளித்த பின்னர் 2  முறை தெளிக்க வேண்டும்
 
                      - பின்வரும்  பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை 25 கிலோ / எக்டர் என்று அளிக்க வேண்டும்.
                        
                          -  குயினால்பாஸ் 4 டி
 
                          -  கார்பரில் 5 டி
 
                          -  குயினால்பாஸ் 25 இ.சி ஒரு எக்டருக்கு  1000 மி லி என்ற அளவில் தெளிக்க  வேண்டும்.
 
                         
                       
                    | 
                 
                | 
           
         
  |