பயிர் பாதுகாப்பு :: அந்தூரியம் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

அசுவினி: மைசஸ் சர்கம்பிளக்ஸஸ்
அறிகுறிகள்:

  • இளம் பூச்சிகள் மற்றும் பூச்சிகள் செடியின் சாற்றை உறிஞ்சும்.
  • இலைகள் மஞ்சளாதல், உருமாறுதல், மோசமான வளர்ச்சி
  • தேன் சுரப்பு வெளி விடுவதால் கரும்புகை பூசண வளர்ச்சி தோன்றும்.

கட்டுப்பாடு:

  • பின்வரும் ஏதாவது ஒரு பூச்சிக் கொல்லியை தெளிக்கலாம்.
    • டைக்கோபால் 2 மிலி/லிட்டர்
    • மாலத்தியான் 2 மிலி/லிட்டர்
    • பாஸ்போமிடான் 2 மிலி/லிட்டர்
  • பைரத்ரிம் சாறு கொண்ட கரைசல் நல்ல பயன் தரும்.
  • ஒட்டுண்ணியாக வாழும் குளவி ஏபிடிஸ் கோலிமானி 5/மீ 2 /வாரம் என்ற அளவில் தோட்டத்தில் வெளிவிடுதல்.
ஏபிடிஸ் கோலிமானி
ஏடேலியா பைபஸ்டேட்டா

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016