கீரை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

இலைபிணைப்பான் : ப்சாரா பேசாலிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • நூலாம்படையால் இலைகளை பிணைத்து அதனுள் இருந்து பச்சையத்தை சுரண்டி தின்று சேதமுண்டாக்கின்றன

பூச்சியின் விபரம்:

  • புழு: பச்சை நிறத்தில் இருக்கும்
  • பூச்சி: அந்துப்பூச்சி சிறியது, மார்பு மற்றும் வயிறுபகுதி மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும்.
  • முன்னறிக்கை செம்பழுப்பு நிறத்திலும், பின்னிறக்கை கரும்பழுப்பு நிறத்திலும் இருக்கும்.
சேதம் புழு அந்துப்பூச்சி

கட்டுப்படுத்தும் முறை:

  • தாக்கப்பட்ட செடிகளை புழுக்களுடன் வேகரித்து அழிக்கவும்.
  • ஹைக்டேருக்கு ஒரு விளக்குப்பொறி அமைத்து அந்துப்âச்சிகளை சேகரித்து அழிக்கவும்.
  • மாலத்தியான் 50 EC 1மி.லி / லிட்டர் தெளிக்கவும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016