  | 
    
      
       | 
    
      
        
          கீரை பயிரைத் தாக்கும் பூச்சிகள்  
                    | 
      
      
         தண்டுக்கூண்  வண்டு: ஹைப்போலிக்சஸ் ட்ரங்கேட்டுலஸ் 
        தாக்குதலின் அறிகுறிகள்:
          
            - தண்டின் நடுப்பகுதியில்      ஒழுங்கற்ற குறுக்குநெடுக்கமான துளைகளில் பூச்சியின் கழிவுப்பொருள்கள் காணப்படும்
 
            - தண்டுகளில்      வீக்கங்களும், நீளவாக்கில் வெடிப்புகளும் காணப்படும்
 
            - புதிய வேர்கள்      மற்றும் இலைகளின் வளர்ச்சி தடைப்படும்
 
           
          பூச்சியின் விபரம்:   
          
            - முட்டை: வெளிர் மஞ்சள்நிற நீள்வட்டவடிவ முட்டை தனித்தனியே தண்டுகளில் இடும் 
 
            - வண்டின்ப்புழு: புழு வெண்மை நிறத்தில் தடிமனாக, கால்களற்றுக் காணப்படும் 
 
            - வண்டு: வண்டுகள் சாம்பல் நிறத்தில் பழுப்பு இறக்கைகளுடன், நீண்ட மூக்கு உடையது
   | 
      
      
         | 
      
      
        கட்டுப்படுத்தும் முறை:  
          
            - காட்டுவகை      தண்டுக்கீரை உணவுப்பயிர்களை,கீரைவகைப்பயிர்களுக்கு அருகாமையில் இருந்தால் சேகரித்து      அழிக்கவும்
 
            - தாக்கப்பட்ட      செடிகளை வண்டினப்புழுக்கள் மற்றும் வண்டுகளுடன் சேகரித்து அழிக்கவும்
 
            - இலைகள் அறுவடைக்குப்பிறகு      மாலத்தியான் 50 EC      2மி.லி/லிட்டர் தெ=ளிக்கலாம்
 
          | 
      
      
      
        
  | 
      
      
      முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு  
      © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016 | 
    
      
         | 
         |