பயிர்ப்பெருக்கம் :: தன் மற்றும் அயல் மகரந்தச் சேர்க்கை முறை

தன்மகரந்தச் சேர்க்கை மற்றும் கலப்பினம் செய்தல் தொடர்பான தொழில்நுட்பங்கள் -

தன் மகரந்தச் சேர்க்கை மற்றும் கலப்பினம் செய்தல் ஆகிய இரண்டாம் பயிர் மேம்பாட்டில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. மலரின் அமைப்பு மற்றும் மகர்ந்தச் சேர்க்கையைப் பொறுத்து இவை வேறுபடுகின்றன. பொதுவாக தன்மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பயிர்களில் அயல் மகர்ந்தச் சேர்க்கை முறையை புகுத்துவது கடினமானது, ஆனால் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பயிர்களில் தன்மகரந்தச் சேர்க்கை நிறையை புகுத்துவது எளிது.

தன்மகரந்தச் சேர்க்கை முறையை அயல்மகரந்தச் சேர்க்கை நடைபெறும் தாவரங்களில் பயன்படுத்துதல்

அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதைத் தடுக்க, முதலில் செடியின் பூக்களை ஏதாவது ஒரு பேப்பரின் மூலம் மூடிவிடவேண்டும். பயிர் இனப்பெருக்க வல்லுநர் இது சார்ந்த தொழில்நுட்பங்களை திறம்படத் தெரிந்திருக்க வேண்டும்.
சிலவகைப் பயறு வகைகளில் மகரந்தச் சேர்க்கை பூச்சிகளின் மூலம் நடைபெறுகிறது. அதனை தடுத்தல் மட்டுமே தன் மகரந்தச் சேர்க்கைக்கு வழிவகை செய்ய முடியும். மக்காச்சோளத்தில் மகரந்தச் குஞ்சும் மற்றும் கதிரை தனித்தனியே பேப்பர் பைகளின் மூலம் மூடி, பின்பு  மகரந்தத்தாள்களை கதிரின் மீது தூவுவதன் மூலம் தன் மகரந்தச் சேர்க்கைக்கு வழிவகை செய்ய முடியும்.

மகரந்தப்பை நீக்கம் (எமாஸ்குலேசன்)
பயிரிலிருந்து ஆண் இனப்பெருக்க உறுப்பான மகரந்தப்பையை நீக்கிவிட்டு, பெண் இனப்பெருக்க உறுப்புக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் செய்வதே எமாஸ்குலேசன் எனப்படும்.

எமாஸ்குலேசன் வகைகள்

1.கைகளின் மூலம் மகரந்தப்பையை நீக்குதல்
பொதுவாக மாலை 4 முதல் 6 மணிக்கள், மகரந்தாள்கள் வெடிப்பதற்கு ஒரு நாள் முன்பாக இடுக்கியின் மூலம் மகரந்தப்பை  நீக்கப்படுகிறது.
எ-கா பருத்தி, எள்

2.உறிஞ்சுதல்
சிறிய ரப்பர் அல்லது கண்ணாடி குழாயின் மூலம் மகரந்ததாள்களை உறிஞ்சு எடுப்பதன் மூலம் தன் மகரந்தச் சேர்க்கையைத் தடுக்கலாம்

3.சுடுநீர்பயன்படுத்துதல்
சூடான நீரைப் பயன்படுத்தி மகரந்தத்தாள்களை அழிக்கும் முறையாகும்
சோளம்: 42 - 48 டிகிரி செல்சியஸ் - 10 நிமிடம்
நெல்: 40 - 44 டிகிரி செல்சியஸ் - 10 நிமிடம்

4.ஆல்கஹால் பயன்படுத்துதல்
குதிரை மசாயின் மஞ்சுரியை 57 சதவீத ஆல்கஹாலில் 10 வினாடிகள் நனைப்பதன் மூலம் மகரந்ததாள்கள் அழிக்கப்படுகின்றன.

5.குளிர்ந்த நீரைப் பயன்படுத்துதல்
குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி மகரந்தாள்களின் செயல்திறன் அழிக்கப்படுகிறது.
எ-கா நெல்: 0.6 டிகிரி செல்சியஸ்

6.ஜெனிடிக் மொஸ்குலேசன்
சைட்டோபிளாச மரபணு ஆண் மலட்டுத் தன்மை முறை பயன்படுத்தப்படுகிறது

7.கேமீட் கொல்லிகள்
சில வகை வேதிப்பொருட்களின் மூலம் ஆண்கேமிட்டுக்கள் அழிக்கப்படுகின்றன.
எ.கா எத்ரல், சோடியம் மெத்திரல் ஆர்செனேட், சிங் மெத்தில் ஆர்சனேட் (நெல்), மேலிக்ஹைட்ரசைடு (பருத்தி, கோதுமை)

பேப்ரால் மூடுதல் உறைபோடுதல்
எமஸ்குலேசன் முடிந்த பிறகு மலர் அல்லது மஞ்சரியை பேப்ரால் மூடி விட வேண்டும்

மகரந்தச் சேர்க்கை
சேகரிக்கப்பட்ட மகரந்த்தாள்கள் எமஸ்குலேசன் செய்யப்பட்ட பூவின் மீது தூவப்பட்டு மகரந்தச்சேர்க்கை நடைபெற உவகை செய்யப்படுகிறது

குறியிடுதல்
மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட மலரில் ஒரு அட்டை கட்டி விடப்பட்டு அதில் கீழ்க்கண்ட தகவல்கள் பென்சிலால் எழுதப்பட்டிருக்கும்.
1.ஆண் மகரந்தப்பை நீக்கப்பட்டதேதி
2.மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட தேதி
3.பெற்றோரினம்
4.எமாஸ்குலேசன் செய்யப்பட்ட மலர்களின் எண்ணிக்கை

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015