பயிர்ப்பெருக்கம் :: பயிர் இரகங்களை அறிவிப்பதற்கான வழிமுறைகள் 

இதில் மூன்று நிலைகள் உள்ளன

  1. மதிப்பிடுதல்.
  2. கண்டறிதல்
  3. வெளியிடுதல் மற்றும் அறிவிக்கப்படுதல்

மதிப்பிடுதல்
இரகங்களின் சிறந்த பண்புகள் மற்றும் மகசூல் போன்ற காரணிகள், ஏற்கெனவே இருக்கும் இரகங்களோடு ஒப்பிடப்பட்டு அவற்றின் சிறப்பியல்புகள் மதிப்பிடப்படுகின்றன.

கண்டறிதல்
மிகச்சிறந்த வளர்ப்பினங்கள் கண்டறியப்பட்டு அவை இரகங்களாக வெளியிடப்படுகின்றன. இரகங்களைக் கண்டறிவதற்கான காரணிகள் / கூறுகள், பயிர்களுக்கேற்றவாறு வேறுபடுகிறது.

வெளியிடுதல் மற்றும் அறிவிக்கப்படுதல்
இரகத்தினைக் கண்டறிந்த பின்பு குறைந்தது ஒரு வருடமாவது தேர்ந்தெடுக்கப்பட்ட இரகம் நோய் மற்றும் பிற் தரம் சார்ந்த ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகிறது. பயிர் இனப்பெருக்க வல்லுநர்கள் இரகத்தை வெளியிடுவதற்கான ஆவணங்களை மத்திய துணை கமிட்டியிடம் சமர்ப்பிக்கவேண்டும். பின்பு அந்த இரகம் ஒரு குறிப்பிட்ட மண்டலத்தில் வெளியிடப்பட்டு பல்வேறு அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு பிறகு விதைகள் பன்மடங்கு உற்பத்தி செய்யப்பட்டு, வெளியிடப்படுகிறது.

மாநில பயிர் இரகங்களை வெளியிடும் கமிட்டி
பயிர் இனப்பெருக்க வல்லுநர், இரகத்தைப் பற்றிய தகவல்களை குறிப்பிடப்பட்ட படிவத்திற்கு இணங்க தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள ஆராய்ச்சி இயக்குநரிடம் ஒப்படைக்கவேண்டும். கீழ்க்கண்ட நபர்கள் அடங்கிய குழுவினால் இரகத்தைப் பற்றிய தகவல்கள் பரிசீலிக்கப்படுகிறது.

வரிசை எண் அதிகாரிகள் பதவி
1. செயலாளர் தலைவர்
2. துணைவேந்தர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உறுப்பினர்
3. வேளாண் துறை இயக்குநர் உறுப்பினர்
4. முதன்மை பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) உறுப்பினர்
5. இயக்குநர் (விதைச் சான்றிதழ்) , கோவை. உறுப்பினர்
6. பேராசிரியர் மற்றும் தலைவர், விதை நுட்பவியல் துளை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை. உறுப்பினர்
7. இணை இயக்குநர் (தோட்டக்கலை) உறுப்பினர்
8. முதல்வர் (வேளாண்மை), அண்ணாலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். உறுப்பினர்
இதர உறுப்பினர்கள்
1. சிறந்த விவசாயிகள் (இரண்டு நபர்கள்) உறுப்பினர்
2. தலைவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை. உறுப்பினர்

மாண்புமிகு வேளாண் துறை அமைச்சர் அவர்களால் உழவர்  தினத்தன்று பயிர் இரகங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.

அறிவித்தல் 
பயிர் இனப்பெருக்க வல்லுநர், இரகங்களின் அறிவிப்பு பற்றிய ஆவணங்களை, புதுடில்லியிலுள்ள ஜீன் வங்கிக்கு அனுப்பவேண்டும். இதைப் பரிசீலனை கீழ்க்கண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

வரிசை எண் அதிகாரிகள் பதவி
1. செயலாளர் (வேளாண் துறை), தமிழ்நாடு தலைவர்
2. வேளாண் துறை இயக்குநர் உறுப்பினர்
3. இயக்குநர் (பயிர் இனப்பெருக்க மற்றும் மரபியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை. உறுப்பினர்
4. இயக்குநர் (விதைச் சான்றிதழ்), கோவை. உறுப்பினர்
5. கூடுதல் வேளாண் துறை இயக்குநர் (இடுபொருட்கள்) உறுப்பினர்
6. விதை ஆய்வாளர், கோவை. உறுப்பினர்
7. மண்டல மேலாளர், தேசிய விதைக்கழகம், அம்பத்தூர். உறுப்பினர்
8. இயக்குநர், செங்கம். உறுப்பினர்
9. ஈஐடி பேரி லிட், சென்னை உறுப்பினர்
10. டூகாஸ், கோவை. உறுப்பினர்
11. சிறந்த அனுபவமிக்க விவசாயிகள் (இருவர்) உறுப்பினர்
12. செயலாளர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை. உறுப்பினர்
13. வேளாண் இணை இயக்குநர் (எஸ்எஸ்எப்), சென்னை. உதவி அமைப்பாளர்
14. துணை ஆணையாளர் (தரக்கட்டுப்பாடு), புதுடில்லி. உதவி அமைப்பாளர்

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015