பயிர்ப்பெருக்கம்:: பயிர்ப்பெருக்க முறைகள்

தன் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் தாவரங்கள்

1.மொத்தத்திலிருந்து தேர்ந்தெடுத்தல் (மாஸ் செலக்சன்)
மொத்தமாக பயிரிடப்பட்ட பயிரிகளிலிருந்து, தேவையான பயிரைத் தேர்ந்தெடுத்து, அவற்றிலிருந்து சில விதைக்ள சேகரிக்கப்பட்டு பின்பு அவைகள் அடுத்த சந்ததியினரை தோற்றுவிப்பதற்காக விதைக்கப்படுகின்றன. இது சில சமயங்களில் புறத்தோற்ற முறை தேர்ந்தெடுத்தல் எனவும் அழைக்கப்படுகிறது.

நவீன சீரமைக்கப்பட்ட முறையில், சிறந்த தாவரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை தனியே அறுவடை செய்யப்பட்டு அவற்றின் விதைகள் அடுத்த சந்ததியினரோடு ஒப்பிடப்படுகிறது. மோசமாக உள்ள பயிர்கள் அழிக்கப்படுகின்றன.

2.தனிவழித்தேர்வு / உயர்வழித்தேர்வு
இவ்வகை முறையில் கீழ்க்கண்ட சில வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

  1. மரபுக்கூறு ரீதியாக வேறுபாடுடைய பயிா தாவரங்களிலிருந்து மிகச் சிறந்த தாவரங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
  2. தேர்ந்தெடுக்கப்பட்ட தாவரங்களின் விதைகள், விதைக்கப்பட்டு அவற்றின் சந்ததிகள் பராமரிக்கப்பட்டு தேவையான விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. பல வருடங்களாக ஆய்வு செய்யப்படுகிறது.
  3. பல வருடங்களில் தேவையான விவரத்தை எடுக்க முடியவில்லையெனில் மற்றும் பிற சிறப்பியல்புகளைக் கொண்ட தாவரங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட சந்ததியினரில், தலை சிறந்தவை தனிவழித்தேர்வாக வெளியிடப்படுகிறது.

3.கலப்புயிர்தல் / கரு இணைப்பு முறை
இரு வேறுபட்ட பண்புகளைக் கொண்ட தாவரங்களைக் கலப்பினம் செய்து தேவையான குணாதிசயங்களைக் கொண்ட தாவரங்களை (பெற்றோரை விட சிறப்பம்சம் கொண்ட) உருவாக்கும் முறைக்கு கலப்புயிர்தல் / கரு இணைப்பு முறை / கரு ஒட்டு முறை என்று பெய ர்.

4.பெடிகிரி முறை
ஒன்று அல்லது மேற்பட்ட குணிதிசயங்களைக் கொண்ட இரு வேறுபட்ட தாவரங்களைக் கலப்பினம் செய்யும் போது உருவாகும் சந்ததி, தேவையான சிறப்பம்சங்ளைப் பெற்றிருக்கவில்லையெனில் பின்பு அந்த சந்ததி மற்றொரு மூன்றாவது பெற்றோரினத்துடன் கலப்பினம் செய்யப்பட்டு, உருவாகும் தாவரங்களிலிருந்து சிறந்த தாவரங்கள் தேர்வு செய்யப்பட்டு பின்னர் அவற்றின் தகவல்கள் முறைப்படி பராமரிக்கப்படுகின்றன.

அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் தாவரங்கள்
இவ்வகைத் தாவரங்கள் கீழ்க்கண்ட இனப்பெருக்க முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

  1. மொத்தத்திலிருந்து தேர்ந்தெடுத்தல் (மாஸ் செலக்சன்)
  2. ஒட்டு இரகங்களை உருவாக்கும் முறை
  3. 3.செயற்கை இரகங்கள

 மிகச்சிறந்த பண்புகளைக் கொண்ட தாவரங்களை கலப்பினம் செய்து கிடைக்கக்கூடிய இரகங்களாகும். இவ்வாறு உண்டாகும் எப்-1 (முதல் சந்ததி)யை அடுத்தடுத்த தலைமுறைக்கு பயன்படுத்தலாம். இது தான் இதனுடைய சிறப்பம்சமாகும்.

திடீர் மாற்ற இனப்பெருக்க முறை
திடீர் மாற்றக் காரணிகள்
வேதியியல் காரணிகள் 4 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

  1. அல்கலைட்டிங் ஏஜென்ட்ஸ்
  2. பேஸ் அனலாக்ஸ்
  3. அக்ரிடைன்
  4. மற்றவை

விதைகள் மேற்கண்ட திடீர் மாற்றக் காரணிகளால் தூண்டப்பட்டு, நன்மை பயக்கும் பண்புகள் கொண்ட தாவரங்கள் உருவாக்கப்படுகின்றன.

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015