உயிரித் தொழில்நுட்பம் ::திசு வளர்ப்பு வாழை
ஸ்பிக் அக்ரோ பயோடெக் =சென்டர

இயற்கை இணைந்து வளமான வேளாண்மைக்கு ஸ்பிக் உளக அளவில் ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது. அதிக விளைச்சல் தரக்கூடிய, திசு வளப்பு முறையில் உருவாக்கப்பட்ட வாழை ஜெர்பரா முதலியவற்றை உலக அளவில் சந்தைப்படுத்தப்படுகின்றன. திசு வளர்ப்பு முறையில் G-9, செவ்வாழை மற்றும் நேந்திரன் வகைகள் சந்தைப்படுத்தப்படுகின்றன. ஜெர்பரா உற்பத்தியில் நெதர்லாந்து நிறுவனமான ஸ்குரஸ் நிறுவணத்துடன் இணைந்து செயல்படுகிறது, மேலும் தகவல்களுக்கு (http://www.schreurs.nl). திசு வளர்ப்பு ஆய்வுக் கூடமானது கோயம்புத்ுரில் 24 எக்கர் பரப்பளவில் வருடத்திற்கு 10 மில்லியான் திசு வளர்ப்பு வாழையை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. மேலும் 700 சதுர மீட்டர் அளவிற்க்கு பசுமை கூடம் மற்றும்  32,000 சதுர மீட்டர் அளவிற்க்கு நிழற்கூடம் மூலம் 1000 மலட்டு அறை கொண்ட தொழிற்நுட்பம் செயல்படுகிறது. இந்த ஆய்வுக் கூடத்திலிருந்து தரமான தொழிநுட்பம் மூலம் 200 க்கும் அதிகமான இரகங்கள் 32 பயிர்களிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. எலிசா மற்றும் பி.சி.ஆர் தொழில்நுட்பம் மூலம் வைரஸ் மற்றும் நூண்ணுயிர் கிருமிகள் பாதிக்கமால் பயிர்கள் உருவாக்கப்படுகின்றன. இந்திய உயிர் தொழில்நுட்ப நிர்வாகம்- புதுதில்லியிடம் அனுமதி சான்றிதல் பெறப்பட்டுள்ளது.

இன்றைய சூழ்நிலையில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் வாழை ஒரு நல்ல வருமான தரக்கூடிய பயிராகும்.தமிழகத்தில் இந்தியாவிலேயே மிக அதிக பரப்பளவில் சுமார் இரண்டு இலட்சம் ஏக்கர் வாழை பயிரிடப்பட்டு வந்தாலும்,நமது சராசரி மகசூல் ஒரு தாருக்கு 20 கிலோவிலிருந்து 25 கிலோ வரைதான் கிடைக்கிறது.இந்த உற்பத்தி திறன் மிகவும் குறைவு.இதை சரசரியாக ஒரு தாருக்கு 35 முதல் 45 கிலோ வரை உயர்த்த திசு வளர்ப்பு வாழை ஒன்றே சிறந்த வழியாகும்.

திசு வளர்ப்பு வாழை பயிரிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

  • தரமான நோயில்லாத கன்றுகள்
  • வீரியத்துடன் வளரக் கூடியவை
  • ஒரே சீரான அறுவடை
  • அதிக விளைச்சல்
  • வருடம் முழுவதும் கன்றுகள் கிடைக்கும்.

திசு வளர்ப்பு வாழை- சாகுபடிக் குறிப்புகள்

நடவு பருவம் மற்றும் இரகங்கள்

உரங்களும் உரமிடுதலும்

சொட்டு நீ்ர் உரப்பாசனம் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் தெளித்தல்

நீர்ப்பாசனம் மற்றும் பின் செய்நேர்த்தி

பயிர்ப் பாதுகாப்பு

அறுவடை மற்றும் மகசூல்

தொடர்ப்புக்கு

நடவு பருவம் மற்றும் இரகங்கள்:

வாழை சாகுபடிக்கு அந்தந்தப் பகுதிகளுக்கேற்ப நடவுகாலங்கள் இருந்த போதிலும் வாய்ப்புள்ள விவசாயிகள் திசு வளர்ப்பு வாழை கன்றுகளை வருடம் முழுவதும் பயிர் செய்யலாம். G9, செவ்வாழை, நேந்திரன் ஆகிய முக்கிய இரகங்கள் திசு வளர்ப்பு முறையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யபடுகிறது.

நடவுமுறை:

இரகங்கள் பயிர் இடைவெளி ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் கன்றுகள் எண்ணிக்கை
G9 6அடி X 6அடி 1234
செவ்வாழை 7அடி X 7அடி 904
நேந்திரன் 6அடி X 6அடி 1234

மேற்கூறிய இடைவெளியில் 1½x1½x1½ அடி அளவுள்ள குழிகள் எடுத்து.குழியை சம அளவில் நன்கு மன்னிய தொழு உரழும்,குழியின் மேல் மண்ணும் இத்தடன் 300 கிராம் ஜிப்சம்,20 கிராம் கார்போபியூரான் 3G ,250 கிராம் வேப்பம் புண்ணாக்கு கலந்த கலவையிட்டு நிரப்பி நீர் பாய்ச்சவும் திசு வளர்ப்பு வாழைக்கும் சாதாரண வாழைக்கும்,உள்ள மிகப்பெரிய வித்தியாசம்,வேர்களின் எண்ணிக்கையே,எந்த ஒரு பருவத்திலும் திசு வளர்ப்பு வாழைகள் இரண்டு மடங்கு அதிக வேர்களைக் கொண்டிருக்கும் ஆகவே எக்காரணத்தினாலும் வேர்கள் பாதிக்கா வண்ணம் பார்த்து கொண்டால் மகசூல் பெருகும்.

  • திசு வாழைக் கன்றுகளை மாலை நேரங்களில் ஈர மண்ணில் நடுவது நல்லது:
  • எமிசான் 1கிராம்/ 1 லிட்டர் தண்ணீரில் (அ) பகலால்1 கிராம்/ 1லிட்டர் தண்ணீரில்(அ) பிளிச்சிங் பவுடர் 10 கிராம்/ 1 லிட்டர் நட்ட ஒரு வாரத்திற்குள் வேர்கள் நன்கு நனையுமாறு ஊற்றவும் .இதையே நட்ட 3 மற்றும்5ஆம் மாதங்களிலும் பின்பற்றவும்.
  • கோடைக் காலங்களில் நடவு செய்யும் போது நட்டபின் வரிசையின் இரண்டு பக்கங்களிலும் ஒரு அடி தள்ளி சணப்பு விதைக்க வேண்டும்.இதனால் மண்ணின் வெப்பம் தணிகிறது.கிழங்கழுகல் நோய் மற்றும் நூற்புழு தாக்கம் குறையும் சணப்பையை.நட்ட 45 நாள் கழித்து பூக்கும் முன் பிடுங்கி பசுந்தாள் உரமாக பயன்படுத்தலாம்.
  • திசு வளர்ப்பு வாழைக் கன்றுகளின் பாலிதீன் பையை/ நாற்றுத்தட்லிருந்து முழுவதுமாக நீக்கி,குழியின் நடுப்பகுதியில் தரை மட்டத்திற்கு நடவு செய்து உடன் நீர் பாய்ச்சவும்.
  • இவ்வாறு செய்வதால் ஆரம் காலய்களில் ஏற்படும் கன்றுகளின் இழப்பைத் தவிர்க்கலாம்.

உரங்களும் உரமிடுதலும்:

நட்ட 45வது நாளில் நன்கு மக்கிய தொழு உரம் 5 கிலோ ஒரு மரத்திற்கு என்ற வகையில் இட வேண்டும். மண் பரிசோதனை செய்து நிலத்தின் தன்மைக்கேற்ப சிபாரிசுப்படி உரமிடுவது நல்ல பலனை அளிக்கும்.குறிப்பாக,கிராண்ட்-9 வாழையில் பொதுவாக 27 இலைகள் வெளிவந்த பின் 28 வது இலை கண்ணாடி இலையாக வெளிப்பட்டு தார் வெளிவரும்.பயிரிடப்படும் இடத்திற்கு ஏற்ப கண்ணாடி இலை 6 முதல் 8 மாதங்களில் வெளிவரும்.பயிரின் ஆரம்ப செழிப்பபை பொறுத்தே காய்களஜன் எண்ணிக்கை மற்றும் தரம் நிர்ணயம் ஆவதால் மொத்த உர அளவை அட்டவணைப்படி பிரித்து அளித்து வந்தால் நல்ல வளர்ச்சியும் ,விளைச்சலும் அதிகரிக்கும்.
மேலும் சாதாரண வாழையை விட திசு வளர்ப்பு வாழையில் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிக வேர்கள் உள்ளதால்,இடப்படும் உரங்களை நல்ல முறையில் எடுத்து கொள்ளும்.

இரசாயன உரங்கள்:

பரிந்துரைக்கப்படும் உர அளவு:
200:60:350 கிராம்/ மரத்திற்கு (தழை:மணி:சாம்பல் சத்து) என்ற அளவில் முறையே திசு வளர்ப்பு வாழை ஒன்றிற்கு 100 கிராம் டி.ஏ.பி 375 கிராம் யூரியா,500 கிராம் மியூரேட் ஆப் பொட்டாஷ் தேவைப்படும் உரத்தின் அளவு நிலத்தின் வளத்தைப் பொறுத்து மாறுபடும்.

உர அட்டவனை:

காலம் ஸ்பீக்
டி.ஏ.பீ
ஸ்பீக்யூரியா ஸ்பீக் மியூரியேட் ஆப் பொட்டாஷ்
45 வது நாள் 100 25 25
90 வது நாள் 0 50 25
125 வது நாள் 0 100 125
150 வது நாள் 0 100 125
180 வது நாள் 0 100 100
பூ வந்த பின் 0 0 100
ஒரு மரத்திற்கு மொத்தம் 100 375 500

சொட்டு நீ்ர் உரப்பாசனம் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் தெளித்தல்:

தழை:மணி: சாம்பல் சத்து (கிராமில்/ மரத்திற்கு)-150:45:185

காலம் உரம் தேவை கிலோ ஏக்கருக்கு கிலோ/நாளுக்கு/ஏக்கருக்கு
1-90 நாட்கள் 19:19:19
13:0:46
யூரியா
192
93
70
2.130
1.033
0.777
91-150 நாட்கள் 0:52:34
13:0:46
யூரியா
59
82.5
117.5
0.983
1.376
1.958
151-300 நாட்கள் 13:0:46
யூரியா
282.5
150
1.884
1.000

ஸ்பிக் பயோகோல்டு உயிர் உரமான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டிரியா ஒரு ஏக்கருக்கு ஒவ்வொன்றும் ஆறு கிலோ என்ற அளவில் நட்டவுடன் மூன்று மற்றும் ஜந்தாவது மாதத்திலும் இட வேண்டும். அசோஸ்பைரில்லம் +பாஸ்போபாக்டிரியா உயிர் சத்துடன் 25 கிலோ மணல் மற்றும் தொழு உரம் கலந்து சீராக இட வேண்டும்.ஆனால் இதை மற்ற உரங்களுடன் சேர்த்து இடக் கூடாது. நட்ட நான்காவது வாரத்திலும்,பத்தாவது வாரத்திலும் மைக்ரோஃபுட் 0.2 % தெளிக்கவும்.
ஸ்பிக் சைட்டோசைம் வளர்ச்சி ஊக்கியை 90 வது,150வது மற்றும் 210 வது நாளில் உரமிட்ட பிறகு ஒரு ஏக்கருக்கு 250 மில்லி லிட்டர்,250 லிட்டர் தண்ணீர் என்ற வகையில் கலந்து தெளிக்க வேண்டும்.

நீர்ப்பாசனம் மற்றும் பின் செய்நேர்த்தி:

மண்ணின் தன்மை,ஈரப்பதம் இவைகளைப் பொறுத்து,வாழை காயாமாலும்,அதே சமயம் நீர் தேங்கி விடாமலும் நீர் பாய்ச்சி வர வேண்டும்.பூ வெளிவர ஆரம்பத்ததிலிருந்து அறுவடை வரை நீர் பாய்ச்சுவதில் மிகுந்த கவனம் தேவை.

  • 3வது மாதத்திலிருந்து.தாய் மரத்திற்கு காயம் ஏற்படா வண்ணம்,மாதமாதம் பக்க கன்றுகளை நீக்கி வரவும்.
  • காயந்த இலைகள் ,சருகுகளை அவ்வப்போது அகற்றி அப்புறப்படுத்தவும்.
  • தேவைக்கேற்ப மூங்கில் அல்லகு சவுக்கு கம்புகளைக் கொண்டு மரத்திற்கு முட்டுக் கொடுக்கவும்.
  • 3வது, 4வது மற்றும் 7வது மாதங்களில் மண் அணைக்கவும்.மேலும் வாழையில் அதிக மகசூல் பெற சிறந்த  களைக் கட்டுப்பாடு அவசியம்.

பயிர்ப் பாதுகாப்பு:

             திசு வளர்ப்பு வாழை வழங்கப்படும் போது பூச்சி, நோயற்றதாகவும், சிறந்ததாகவும்  இருந்த போதிலும் ,அவை வயல்வெளிகளில் மண்ணின் தன்மை மற்றும் சூழலில் உள்ள பூச்சி,நோய்,உரச்சத்து பற்றாக்குறை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும்.அதற்கு கீழ்கண்டபயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். வாழையைத் தாக்கும் சில முக்கியமான பூச்சி,நோய்களும்,அவைகளின் தடுப்பு முறைகளும் கீழ்க்கண்ட அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

பூச்சிகள்:

அசுவினி:

அறிகுறிகள்:

  • வாழை இலைகளில் அடிப்பகுதியில் இலை உறைகளில் இரந்து இலைச்சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் வெளிரிவிடும்.தேமல் நோயைப்பரப்பும்.

தடுப்பு முறைகள்:

  • ஸ்பிக் நீம் கோல்டு ஒரு ஏக்கருக்கு 500 மிலி என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தவும்.

நூற்புழு:

அறிகுறிகள்:

பயிரின் வளர்ச்சியைப் பாதிக்கும், மகசூலைக் குறைக்கும்,தோண்டப் பார்த்தால் வேரில் முடிச்சுகள் தெரியும்.

தடுப்பு முறைகள்:

 கார்போபியூரான் 3G குருணை மருந்தினை நடும்போது,குழியில் 20 கிராழும் நட்ட 3.5 மாதங்களில் 30 கிராம் என்ற அளவில் இடவும்.

கிழங்கு கூன்வண்டு:

அறிகுறிகள்:

  • தோண்டிப்பார்த்தால் கிழங்கில் துளைகள் தெரியும்.

தடுப்பு முறைகள்:

  • கார்போபியூரான் 3G குருணை மருந்தினை நடும்போது குழியில் 20 கிராமும் நட்ட 3,5 மாதங்களில் 30 கிராம் என்ற அளவில் இடவும்.

நோய்கள்

இலைப்புள்ளி நோய்:

அறிகுறிகள்:

  • இலைகளில் கண் வடிவப்புள்ளிகள் தோன்றம்.

தடுப்பு முறைகள்:

  • வேனிஸ் ஒரு ஏக்கருக்கு 500 மிலி இல்லது கார்பன்டசிம் 250 கிராம் தெளித்து கட்டுப்படுத்தவும்.

வாடல் நோய்:

அறிகுறிகள்:

  • இலைகள் மஞ்சளாகி மேலிருந்து கீழாகத் தொங்கும்.குருத்து மட்டும் பச்சையாக இருக்கும்.

தடுப்பு முறைகள்:

  • 40 மி.கிராம் கார்பன்ட்டசிம் மருந்தை கேப்ஸ்யூலில் அடைத்து வாழையின் அடிப்பாக்த்தில் சிறிதளவு மண்ணை அகற்றி கிழங்குப் பகுதியில் 45º அளவில் துளையிட்டு கேப்ஸ்யூலை வைத்து களிமண் கொண்டு மூடவும்.முழுமையாக பாதிக்கப்பட்ட மரத்தை அப்புறப்படுத்தி எரிக்கவும்.

வைரஸ் நோய்கள்:

நோய்: முடிக்கொத்து நோய்,தேமல் நோய்கள்

அறிகுறிகள்:

  • இலைகள் சிறுத்து சுருக்காவும் கொத்தாகவும் இருக்கும்.குருத்து அழுகல் ஏற்படும்.இலைகளில் மஞ்சள்,பச்சை கோடுகள் மாறி மாறிக் காணப்படும்.

தடுப்பு முறைகள்:

  • அசுவினி இந்நோய்களை பரப்புவதால் அசுவினி அதிகம் வாழும் பயிர்களை ஊடுபயிராக பயிரிடுவதை தவிர்க்கவும்.(உதா.பூசினி வகைகள்,வெண்டை,தாக்காளி)முன்னெச்சரிக்கையாக ஸ்பிக் நீம்கோல்டு 500 மிலி (அ) டைமெதோயேட் 250 மிலி ஏக்கருக்கு தெளிக்கவும்.

குறிப்பு:
மேற்கண்ட வைரஸ் நோய்கள் நாட்டுக்கன்றுகள் மூலம் பரவும் வாய்ப்பு அதிகம் உண்டு.ஆனால் ஸ்பிக் வேளாண் திசு வளர்ப்பு மையத்தில் சிறந்த நோயில்லாத தாய் செடிகளை தேர்ந்தெடுத்து அவற்றை எலிசா சோதனை முர்லம் ஈய்வு செய்து நோயில்லாத கன்றுகள் விநியோகிக்கப்படுவதால் கன்றுகள் விநியோகிக்ககப்படுவதால் கன்றுகள் மூலம் பரவும் வாய்ப்பு முற்றிலும் தடுக்கப்படுகிறது.
தகுந்த பயிர்பாதுகாப்பு முறைகளை வளரும் பருவத்தில் சரியாகக் கடைப்படித்து வந்தால் நோய்கள் வராமல் தடுக்கலாம்.

அறுவடை மற்றும் மகசூல்:

பூ முழுமையாக வெளிவந்து சராசரியாக 100 நாட்கள் அறுவடை செய்யலாம்.

கிராண்ட்-9 35-45 டன்கள்/ ஏக்கருக்கு
செவ்வாழை 25-30 டன்கள்/ ஏக்கருக்கு
நேந்திரன் 18-20 டன்கள்/ ஏக்கருக்கு

குறிப்பு:  திசு வளர்ப்பு வாழைக்கன்றுகள் நோயற்றவைகளாக திசு வளர்ப்பு மையத்திருந்து டெலிவரி செய்யப்படுகிறது.ஆனால் வாழைக்கன்றுகள் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சத்தி உடையவை அல்ல.மகசூல் மற்றும் பயிரின் தன்மைகள் நிலத்தின் தன்மை, விவசாய முறைகள்,சீதோசன நிலை நீர்ப்பாசனம் ,இயற்கை சீற்றம் களைக் கட்டுப்பாடு மற்றும் பூச்சிநோய் தாக்குதலைப் பொருந்து மாறுதலுக்கு உட்பட்டவை. மேற்கூறிய காரணிகள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாததால் மகசூல் அளவு மற்றும் பயிரின் தன்மைக்கு நிறுவனம் பொறுப்பேற்க் இயலாது.


 தொடர்ப்புக்கு
 
அக்ரி பிசினஸ் டிவிஷன்,
ஸ்பிக் லிமிடேட்,
ஸ்பிக் ஹவுஸ்,
88 மவுண்ட் ரோடு, கிண்டி
சென்னை- 600032
தொலைபேசி: +91 44 22350245
Fax: +91 44 22352163

E-mail: cmab@spic.co.in

www.spic.in
ஸ்பிக் அக்ரோ பயோடெக் சென்டர்,
சிக்ரசாவடி புலுவப்பட்டி அஞ்சள்,
சிறுவானி ரோடு,
கோவை- 641101
தொலைபேசி: 0422-265 0192,
9865265858/ 9994006220/ 9865734390
E-mail: agribusiness@spic.co.in
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014