வங்கி மற்றும் கடன் :: மண்டல கிராம வங்கிகள்

மண்டல கிராம வங்கிகள் அமைக்கபட்டதன் குறிக்கோள்

  • கிராமப்புற பகுதிகளில் உள்ள கடன் தேவைகளை நிவர்த்தி செய்தல்.
  • கிராமப்புற சேமிப்புகள் / வைப்பு நிதிகைளை நகர்ப்புற பகுதிகளுக்குச் செல்லாமல் தடுப்பது.
  • மண்டல உறுதியின்மையைக் குறைத்து கிராமப்புற வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துதல்.
  • மண்டல கிராம வங்கிகள் ஏற்படுத்துவதன் முக்கிய குறிக்கோள் சிறு  மற்றும் குறு விவசாயிகள் விவசாய வேலையாட்கள் மற்றும் சிறு தெரழில் முனைவோர்க்கு கடன் மற்றும் இதர வசதிகளை ஏற்படுத்தித் தருதல்.
  • ஒவ்வொரு மண்டல கிராம வங்கிகளும் அதன் அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் செயல்படும். 
  • அரசு அறிவித்த பகுதிகளில் தேவைப்பட்டால் மண்டல கிராம கிளைகள் ஏற்படுத்தப்படும்.
  • ஒவ்வொரு மண்டல கிராம வங்கிகளும் பொதுத் துறை வங்கியின் உதவியின் கீழ்     அதன் பங்கீட்டுக்கு மூலதனத் தொகை, நிர்வாகம் மற்றும் நிதி உதவி அளித்தல், வேலைக்கு ஆள் எடுத்தல் மற்றும் ஆரம்ப காலத்தில் அவர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்ற செயல்களில் உதவி பெற்று செயல்படும்.

செயல்கூறுகள்

  1. வங்கி விதிமுறைகள் சட்டப்படி ஒவ்வொரு மண்டல கிராமப்புற வங்கியும் அதன் வங்கியின் தொழிலை பரிமாற்றம் செய்து கொள்ளலாம் மற்றும் துறை 6(1) - ன் கீழ் மேற்குறிப்பிடப்பட்டுள்ள சட்டவிதியின் கீழ் நடத்தவேண்டும்.
  2. ஒவ்வொரு மண்டல கிராம வங்கியும், சில தொழில்கள்  / செயல்கூறுகளைச் செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்கள், வேளாண் வர்த்தக சங்கம், வேளாண் பதினிடும் சங்கம், கூட்டுறவு பண்ணைச் சங்கம், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், விவசாய சேவை சங்கம், தொடக்க நிலை வேளாண் தேவைகள் அல்லது வேளாண் செயல்கள் மற்றும் இதர தேவைகளுக்கு கடன் மற்றும் முன்பணம் வழங்குதல்.
  3. சிறுதொழில் முனைவோர், சிறு வர்த்தகம், வணிகம், தொழில் நிறுவனம் மற்றும் இதர வேலைகள் செய்வோர், அந்த வங்கி கிளையின் செயலகப் பகுதிகள் வரும்படி இருப்பின், அவர்களுக்கு கடன் மற்றும் முன்பணம் வழங்கப்படும்.
  4. பாரத ரிசர்வ் வங்கி மண்டல கிராமப்புற வங்கியை சிறப்புத் துறையின் கீழ் கொண்டு வந்து வர்த்தக வங்கிக்கு இணையாக தரம் உயர்த்தியுள்ளது. முன்னுரிமை துறைகளுக்கு 40 சதவிகிதம் அவர்களது முன்பணமாக பெரும்படி உறுதி செய்து கொள்ளப்படவேண்டும். இந்த 40 சதவிகிதம் தொகையில், 25 சதவிகித தொகை ஏழை மக்களுக்கு அல்லது மொத்த முன்பணத்தில் 10 சதவிகிதம் தொகை ஏழை மக்களுக்கு சென்று சேரவேண்டும்
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016